பக்கம்:பாவைப் பாட்டு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருப்பள்ளி எழுச்சி

இத்திருப்பாடலில் இதற்கு முன் அமைந்த நான்கு பாடல்களில் கட்டாயமாகக் காணப்பட்ட இயற்கை வருணனைகள் இடம்பெறவில்லை; ஆயினும் மனமாசுகளை அகற்றி-மனவிருளைப் போக்கித் தங்களை ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டிநின்றனர். ஏனெனில் தங்களை அவன் அடிமைகள் எனக் கொண்டு, அடைக்கலம் தந்து ஆட்கொண்டால்தான், தாங்கள் உய்ய முடியும், ஈடேற்றம் காணமுடியும் என்று கருதினர். இவ்வுலகத்து உயிர்கள் சிவஞான இன்பத்தில் திளைத்து நிற்கவேண்டும் என்று வேணவாக் கொண்டன என்பது இத்திருப்பாட்டால் தெரியவருகின்றது.

இத்திருப்பாட்டின் வழி, சில செய்திகளை மாணிக்க வாசகர் நம் மனத்தகத்தே ஊன்ற வைக்கின்றார் எனலாம்.

முதலாவதாக இறைவன் ஐம்பூதங்களில் நிறைந்தொளிர் கின்றான். அவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. இளங்கோ வடிகள் சிவபெருமானைப் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்பர். இதனையே மணிவாசகப் பெருந்தகையார் திருவெம்பாவையின் முதற்பாட்டில் சிவபெருமானை ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு பிறப்பிறப்பற்ற பிஞ்ஞகனை ஆடிப்பாடித் தம்மை மறந்து தொழுகிறார்கள் மக்கள் அவன் புகழை நாவாரப்பாடி மகிழ்கின்றார்கள்; கூத்தாடிக் களிக்கின்றார்கள். சிவபெருமானைப் பார்த்தவர்கள் இல்லை; கேட்டவர்கள் இல்லை. இருப்பினும் அடியவர்களாகிய தங்கள் கண்முன் வந்து இறைவன் காட்சி தந்திட வேண்டு மென்று வேண்டுகோள் விடுக்கின்றார்கள். இவ்வாறு கண்ணுக்குக் காட்சி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், “ஏதங்கள் அறுத்து எம்மை ஆட்கொண்டு அருள்புரியும்’ என்று கேட்டுக்கொள்கின்றனர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மும்மலங்கள் எனப்படும். இம்மும்மலங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/107&oldid=592151" இலிருந்து மீள்விக்கப்பட்டது