பக்கம்:பாவைப் பாட்டு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 107

அழிக்கும் ஆற்றல் உடையவன் இறைவன் ஒருவனே ஆவன். எனவே தம் குற்றங்கள் அனைத்தையும் களைந்து, அடைக் கலப் பொருளாகத் தங்களை ஏற்றுக்கொண்டு அதாவது அடிமைகொண்டு ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு, * எம்பெருமான்! பள்ளி எழுந்தருளவேண்டும்’ என்று

விண்ணப்பித்து நின்றார்கள்.

‘பூதங்கள் தோறுகின்

றாய்’ எனின் அல்லால் போக்கிலன் வரவிலன்’

எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல்

ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக்

கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப்

பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும்அரி

யாய்! எங்கன் முன்வந்(து); ஏதங்கள் அறுத்தெம்மை

ஆண்டருள் புரியும் எம்பெரு மான் பள்ளி

எழுந்தரு ளாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/108&oldid=592153" இலிருந்து மீள்விக்கப்பட்டது