பக்கம்:பாவைப் பாட்டு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாவது திருப்பாடல்

“பூதங்கள் தோறும் நின்றாய்” என்று தொடங்கிய சென்ற திருப்பாடலில் சிவபெருமான் தங்கள் மன மாக களைக் களைந்து தங்களை அடிமை கொண்டு ஆட்கொண் டருள வேண்டும் என்று குறிப்பிட்ட மாணிக்கவாசகர், இத்திருப்பாட்டில் அடியவர்கள் இறைவனை வழிபாட் டினால் அடைந்தனர். யானும் அவ்வாறே தொடர்வேன், எனக்கும் அருள் புரிக என வேண்டுவார் முதற்கண் சிவபெருமானைப் புகழ்ச்சிச் சொற்களோடு முன்னிலைப் படுத்த எண்ணி ‘அணங்கின் மணவாளா என்றார்.

‘உமையம்மையின் கணவனே’ என விளித்துள்ள மையைச் சற்று ஆழ நோக்கி ஒர் உயரிய உண்மையை உணர வேண்டும். ஏனெனில் இதில் தமிழ்ப் பண்பாடு அமைந்துள்ளது. இறைவன், இயற்கை, பெண்மை இவற்றைப் போற்றுவதென்பது தமிழ்ப் பண்பாடும் மரபும் ஆகும். இறைவனின் தோற்றப் பொலிவு இயற்கையில் ஒளிவிடுகின்றது. எங்கெங்கெல்லாம் அழகு கொலு விற் றிருக்கின்றதோ அங்கங்கெல்லாம் இறைவன் திருக்கோயில் கொண்டிருப்பதாக நம் முன்னோர் கருதினார்கள். திருமுகாற்றுப்படை இத்தகைய இடங்களைப்பட்டியலிட்டுக் கறும். மூன்றாவதாகப் பெண்மையின் மென்மையில் இறைவனின் அருள் உள்ளத்தைக் காணலாம். கடவுள் எங்கும் இலங்கினாலும் தாயைப் படைத்து அவனிடத்தில் அளவற்ற அன்பையும் படைத்திருக்கிறான் என்பர். இத்தகு பெருமைக்குரிய பெண் பிறவியினைச் சிறப்பித்துப் பேசுவது தமிழர் மரபாகும். ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/109&oldid=592154" இலிருந்து மீள்விக்கப்பட்டது