பக்கம்:பாவைப் பாட்டு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாவைப் பாட்டு

‘பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போது எனத் தோழியர் பண்டும் பண்டும் பெருமானின் உறவுடைய நிலையைச் சுட்டுவர். பிறவிகள் எத்தனை யாயினும் இஃது அற்றுப் போகின்ற தொடர்போ? ‘ஆட்டு வித்தால் யாரொருவர் ஆடாதாரே’ என்பார் போல, உலகனைத்தையும் இயக்குகின்ற மூலப் பொருளன்றோ அவன்? பசுவாகிய உயிர்த் தொகுதி பதியை நினைத்தல் இயல்பு. எனினும், நினையவொட்டாது தடுக்கும் மலயகற் றவும், ஞானநிறைவெய்திய நிலையில் இறை'அனுபவம் பெறவும் அவனது இன்னருளை வேண்டி உயிர்கள் இருத்தல் வேண்டும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று மணிவாசகப் பெருந்தகை இதனைக் கூறுவர். ஆகவே பண்டைய நிலையை மறந்து கிடக்கும் ஓர் உயிரினை ஏனைய துணை உயிர்கள் வந்து எழுப்புகின்றன. ‘புறத்தே எத்தனை இழைகள் அணிந்தவள் நீ! அகத்.ே ஒன்றை மறந் தாய் போலும்’ என்ற குறிப்புத் தோன்ற, புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒருங்குதோன்ற அறிவுறுத்துகின்றனர் ஆன்ற மைந்த அறிவுத் தோழியர். ‘எம்பெருமானின் திருவடி யன்றி, மற்றொன்றை எண்ணவும் பேசவும் இல்லா இயல் புடையராகிய இவர் இத்தகு குறைமொழிகள் கூறலாமோ’ எனக் கேட்கிறாள் தலைவி. இவ்வாறு பாவையர், பரம் பொருளின் பத்தி நெறி பேசி நீராடச் செல்லுகின்றனர்.

வானவரெல்லாம் சிவபெருமானை வாழ்த்துவர். எதற்காக? தாம் வாழ்வதற்காக அவர்கள் தம் மனத்தை எல்லாம் இறைவன்பால் தாழ்த்துவர்: எதற்காக? தம்மை யெல்லாம் பிறர் தொழ வேண்டியே என்று மாணிக்கவாசகர் திருச்சதகத்தில் கூறுவர். அவ்வாறு வழிபடுகின்ற வானவர்க் கெல்லாம் அருளாது, கருப்பங்கள் பலகோடி செல்லத் தீய கனலில் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி நிற்பவர்க் கொளித்து, யோகநீள் முனிவர்க்கொளித்து, மறைகளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/11&oldid=592155" இலிருந்து மீள்விக்கப்பட்டது