பக்கம்:பாவைப் பாட்டு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருப்பள்ளி எழுச்சி

துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!” என்பது இதன் பொருளாகும்.

எம்பெருமான் - எனது தலைவனே! எனத் தொடங்கி பேப்பு அறவீடு இருந்து உணரும் நின் அடியார் என்று அடியவரைக் குறிப்பிடுகின்றார். பரப்பு நீங்கப் பேரின்ப நிலையினின்றும் உணர்கின்ற உனது அடியவர்கள் என்ப தனால் வேகமான வாழ்க்கையினை மேற்கொண்ட அடியவர் களை ஆட்கொள்ளல் உனது கருத்தாக இருக்க வேண்டும் என்றார். வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க” என்ற சிவபுராணத் தொடரும் இவ்வுண்மையினை உணர்த் தும். இவ்வடியவர்கள் “பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் என்றார். பந்தனை என்பது பாசக் கட்டு. பிறந்து விட்ட காரணத்தால் வினையினை நுகர வேண்டும். வினை நுகர்ந்து கழிவுண்டாய பிறகு நல்லறிவு கொளுத்தப்பட்டு உடலுறுப்புகளால் இறைவனை வழிபடற்கு இயலும் என்க. அப்பொழுதுதான் பாசக் கட்டறுதல் என்பது நேரும்.

“மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்கு கின்றார் என்னும் தொடர் ‘மையின் தன்மை குழப் பொருந்திய கண்களுடைய குல மகளிரும் அறிவுடைமைக்கு அறிகுறியாகும் சிறப்பினால் சிவனைப் பணிகின்றார்கள் என்னும் பொருள் கொள்ளும்.

மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலை’ எனும் திருஞான சம்பந்தர் திருமயிலாப்பூர்த் தேவாரம் (2) மையினைப் பூசுதல் மகளிர் வழக்கு என்பதனை உணர்த்தும். அடியார் பலரும், பாசத்தினை அறுத்தவர் பலரும், கண்ணியர் பலருமாகச் சிவனை வழிபடல் மேற்கொள்ளு கின்றனர் என்பதனை மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/111&oldid=592158" இலிருந்து மீள்விக்கப்பட்டது