பக்கம்:பாவைப் பாட்டு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 111

இறைவனை வணங்குவதென்பதே மானுடத் தன்மை களுள் ஒன்று என்று புலப்பட மானுடத் தன்மையின் வ ன ங் கு கி ன் றார் என்பர். கோளிற் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்று திருக்குறளும் இதனை உணர்த்தும். இறைவன் உடலுறுப்புகளைப் படைத்திருப்பதே அவ்வுறுப்புகளைக் கொண்டு அவனை வணங்குவதற்கே என்பர். ‘தலையே நீ வணங்காய்’ என்ற .ே த வார த் திருப்பாட்டானும் இவ்வுண்மையை உணரலாம். ‘கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்ற குறளும் கடவுளை வணங்குதலே கற்றதன் சிறப்பாக அமையும் என்பர். மனிதர் அறிவுடையோர் எனக் கருதப்பட வேண்டுமானால், அவர்கள் தீயன சிறிதும் நெஞ்சில் கருதாமலிருக்க வேண்டும் என்பர்.

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே’ என்று இறை வனைக் குறிப்பிடடு ‘எமை ஆண்டு இப்பிறப்பு அறுத் து அருள் புரியும்’ என வேண்டுகின்றார்.

எங்களை அடிமை கொண்டு, நாங்கள் பெற்றிருக்கும் இப்பிறவியினை யொழித்து எங்கட்கு அருள் புரிவீராக என்று விண்ணப்பித்து, இறுதியாக எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே என்கிறார்.

தம்மை அடிமை கொண்டு, பிறவி வேரை அறுத்து, புவியில் மீண்டும் பிறவாமற் காத்து அருள வேண்டும் என்பதனையே இத்திருப்பாடல் உணர்த்துகின்றது.

பப்புற வீட்டிருந்து

உணரும் கின் அடியார் பங்தனை வந்தறுத்

தனர்.அவர் பலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/112&oldid=592159" இலிருந்து மீள்விக்கப்பட்டது