பக்கம்:பாவைப் பாட்டு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது திருப்பாடல்

மேலைத் திருப்பாட்டில் மாணிக்கவாசகப் பெருமான் வழிபாட்டின் சிறப்பினை வற்புறுத்தினார். தம்மைச் சிவபெருமான் இனி இப்புவியில் வந்து பிறக்கவிடாமல் பிறப்பறுத்து ஆட்கொள்ள வேண்டும் என்ற வேண்டு கோளினை விடுத்தார். “அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்’ எனத் தொடங்கும் இத்திருப்பாட்டில் சிவானந்தானுபவம் இத்தன்ம்ையது என்று விளக்கம் தருவார் போல் முதற்கண் சிவபெருமானை மதுவளர் பொழில் திருவுத்தரகோச மங்கை யுள்ளாய்’ என்று விளித்தார். தேன் ததும்பும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் திருவுத்தரகோச மங்கையென்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண் டுள்ளவனே என்று மணிவாசகப் பெருந்தகையார் விளித் துள்ளமைக்குக் காரணம் உளது. திருவுத்தரகோச மங்கை என்னும் சிவத்தலம் இன்றைய இராமநாதபுர மாவட்டத் தில் உள்ளது. திருவுத்தரகோச மங்கை என்னும் திருப்பதி யினைக்குறிப்பிட்ட அடிகளாருக்குத் தம் நெஞ்சில் எப்போ தும் நீங்காது குடிகொண்டிருக்கும் திருப்பதியாம் திருப்பெருந் துறை நினைவுக்கு வருகின்றது. திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்தான் மாணிக்கவாசகரைச் சிவபெருமான் ஆட்கொண்டார். எனவே அப்பதி அவர் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினைப் பெறுகின்றதெனலாம்.

இனிச் சிவானந்தானுபவம் எத்தகையது என்று விளக்கப்புகுகின்றார். அது பழச்சுவையென அமுதென அறிதற்கரிதென எளிதென அமரரும் அறியார்’ என்றார். தேவருலகில் வாழ்பவர்கள் யாவரும் சிவானந்தானுபவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/114&oldid=592162" இலிருந்து மீள்விக்கப்பட்டது