பக்கம்:பாவைப் பாட்டு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருப்பள்ளி எழுச்சி

மானது கனிந்த பழத்தின் சுவை போலவும், அமுதம் போல வும், அறிதற்கு இயலாதது என்றும், அறிதற்கு எளியது என்றும், அறியமாட்டார்கள் என்றார். உள்ளபடியே சிவானந்தானுபவம் :இவ்வாறு இருக்கும் என விளக்கப்பட முடியாமல் அனுபவப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் உவமை கூறி ஒருவாறு தெளிவுறுத்தலாம். சிவானந் தானுபவம் பழச்சுவை போல் இனிக்கும் எனலாம்; அமுதம் போலத் தித்தித்திருக்கும் எனலாம். சிவானந்தானுபவ நிலையைத் திருநாவுக்கரசர் பெருமான் திருவிடை மருதுார்த் திருப்பதிகத்தில் (6)

கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க் குழற்பாவை நல்லாரினும் தனிமுடி கவித்தாளு மரசினும் இனியன்தன் அடைந்தார்க்கு இடை மருதனே

என விளக்குவர். மேலும் அவர் தம்முடைய தனிக் குறுந்தொகைப் பாட்டொன்றிலும் (10)

தெள்ளத்தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல் அமுதவொளி வெளி கள்ளத்தேன் கடியேன் கவலைக்கடல் வெள்ளத்தேனுக் கெவ்வாறு விளைந்ததே

என்றும் குறிப்பிட்டிருக்கக் கணலாம். சிவானந்தானுபவம் சிவனன்பர் அல்லாதார்க்கு அறிதற்கரிதாகவும், அதே சமயத் தில் சிவன்பாலே சித்தம் நிறுத்திய சிவனடியார்களுக்கு எளிதிற் கைகூடும் ஒன்றாகவும் அமைவதனால் “அறிதற் கரிதென எளிதென என மாணிக்கவாசகர் குறிப்பிட்டார்.

பின்னர், “இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே எங்களை ஆட்கொண்டு இங்கு எழுந்தருளும்’ என்றார். ‘இவ்வுலகத்தில் இப்பிறவியில் வந்து அமைந்ததாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/115&oldid=592163" இலிருந்து மீள்விக்கப்பட்டது