பக்கம்:பாவைப் பாட்டு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 113

உடலாகிய இது, சிவபெருமானது திருமேனியாகத் திகழு மாறும், இவ்வுடம்பில் விளங்கும் உயிராகிய இவன் அவனாகிய சிவமாக விளங்குமாறும் அருளிநின்று எங்களை ஆட்கொண்டருள்வாயாக’ என்று வேண்டுகின்றார்.

உடலானது சிவன் திருமேனியாதலும், அவ்வுடம்பின் உள் நின்ற உயிர் அருளொடுங் கூடிச் சிவமாய் நின்றதெனக் கொள்ளலாம். இதனையே மாணிக்கவாசகர் திருவாச கத்தில்,

சித்தமல மறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அத்தன் எனக் கருளியவா(று) ஆர் பெறுவார்

அச்சோவே

என்றார். எனவே உலக உயிர்கள் தத்தம் உடம்பினை மாசுகள் களைந்து இறைவன் உறையும் இடமாக ஆக்கிவிட் டால் அவ்வுடலில் இறைவன் மகிழ்ச்சியுடன் குடிகொள்வான் என்ற கருத்தினை மாணிக்கவாசகர் திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் (9 : 8)

அடியார் உள்ளத் தன்பு மீதுாரக்

குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் என்று குறிப்பிடுகின்றார்.

‘ஆன்மாவின் வேறாய்ச் சிவன் கண்ணேயுளவாகிய முற்றுணர்தன் முதலிய எண்வகைக் குணங்களும் ஆன்மா வின் மாட்டு மேம்பட்டு விளங்கும் விளக்கமே சிவானந்த இன்பம்: ஆன்மா அதுவாய் அழுந்திநின்று அவ்விளக்கத்தை அறிதலே அனுபவம் எனப்படும், எனும் சிவ ஞானபாடியத் தானும் (398) வலியுறுத்தப்படுவது காண்க எனச் சைவ சித்தாந்த சாத்திர வல்லுநர்கள் குறிப்பிடுவர்.

‘'எது எமைப் பணி கொளும் ஆறு; அது கேட்போம்” என்ற தொடர் எங்களை ஏவல் கொள்ளுதற்கமைந்த பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/116&oldid=592169" இலிருந்து மீள்விக்கப்பட்டது