பக்கம்:பாவைப் பாட்டு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருப்பள்ளி எழுச்சி

யாது? அதனைக் கேட்க முந்துகின்றோம் யாம்’ என்ற பொருளைத் தருவதாகும்.

ஓர் உயிரில் - ஆன்மாவினுள் சிவபெருமான் குடி கொண்டு விட்ட பிறகு நிகழ்வன அனைத்திற்கும் அச்சிவ பெருமானே பொறுப்பேற்றுக் கொள்கிறான் என்பதனை.

வேண்டத்தக்கது அறிவோய் ே வேண்ட முழுவதும் தருவோய் ே வேண்டும் அயன்மாற் கரியோய் ே வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்றுண் டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே

- திருவாசகம் : குழைத்தபத்து : 6.

என்பதனால் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சிவபெருமானிடம் வேண்டுகோள் விடுத்து, அவரைப் பள்ளியை விட்டு எழுந்தருளி வந்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று மாணிக்கவாசகர் வேண்டி நிற்கிறார்.

அது பழச் சுவையென

அமுதென அறிதற்(கு) அரிதென எளிதென

அமரரும் அறியார்: இது அவன் திருவுரு,

இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்(டு)

இங்கெழுங் தருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/117&oldid=592170" இலிருந்து மீள்விக்கப்பட்டது