பக்கம்:பாவைப் பாட்டு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது திருப்பாடல்

இறைவனிடத்துக் கிடைக்கக் கூடிய சிவானுபவத்தை விழைந்து, அதனை உறுதியாகப் பெற்றுத் துய்க்க நினைத்த மாணிக்கவாசகப் பெருமான் ‘முந்தியும் முதல் நடு இறுதியும் ஆனாய்’ என்று தொடக்கம் அமைந்துள்ள இத்திருப்பாட் டில், தனக்கென்று ஒர் ஊரினைக் கொண்டிராதவனும், தனக்கென்று ஒரு பெயரில்லாதவனும் ஆன சிவபெருமான் ஒர் உருக்கொண்டு வந்தருளும் சிறப்பினைக் கூறத் தொடங்கி, ‘ஆரமுதே’ என அன்பாய் விளித்தார். இங்கு ‘ஆரமுது’ என்ற சொல் பெறுவதற்கரிய முத்தி இன்பத் தினை உணர்த்தி நிற்கிறது.

எவ்வளவு பருகினாலும் தெவிட்டாது மேலும் மேலும் பருகத் துரண்டும் ஒரு பொருளே ஆரமுதமாகும். முத்தி இன்பமாக விளங்கும் சிவபெருமான் உயிர்களுக்கு ஆதாரமாகப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களிலும் உடனாய்த் திகழும் முறைமையினைக் குறிப்பிடுவார். ‘முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்’ என்றார். ‘முந்திய’ என்ற சொல் ஒர் ஆழ்ந்த உட் பொருளைக் கொண்டதாகும். அண்ட சராசரங்களில் உறை யும் அனைத்து உயிர்க்குலங்களுக்கும் முன்னே தோன்றி அனைத்துயிர்களுக்கும் ஆதாரமாய் விளங்கும் ஆதார சுருதி யாய் விளங்கும் இறைவனைக் குறித்தவாறாம். முதல் நடு இறுதி என்பது முத்தொழில்களைக் குறிக்கும். படைப்புத் தொழிலைச் செய்பவன் பிரம்மன்: காத்தல் தொழிலைச் செய்பவன் திருமால்; அழித்தல் தொழிலைச் செய்பவன் உருத்திரன். இம் முத்தொழிலினை முறையே ஆற்றுவோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/119&oldid=592173" இலிருந்து மீள்விக்கப்பட்டது