பக்கம்:பாவைப் பாட்டு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 11

கெல்லாம் ஒளித்த தெய்வம், எங்கோ என்று நெக்கு நெக்கு உருகும் உண்மை அன்பர் பொருட்டாய் உவந்து வந்து

நின்று, காட்டாதன எல்லாம் காட்டி , தாட்டாமரை காட்டி ஆண்டு கொள்ளும் என்பது மணிவாசகம். அவ்வாறே விண்ணோர்கள் பாராட்டக் கூசுகின்ற மலர்ப்பாதம்

இப்பாவையர்க்காக, வந்தருள் புரிகிறது.

“நானார், என் உளமார்? ஞானங்களார்’ என எல்லா வற்றையும் தன்னை ஆட்கொண்ட இறைவனிடத்தே ஒப்படைத்துக் கொண்ட எளியோர்க்கே தில்லைச் சிற்றம் பலவன், வந்து அருள்புரியும் என்பதனை இப்பாடல் தெளி வுறுத்துகின்றது. “ஈசனார்க்கு அன்பின் யாம்யார்’ என்பதன் வழியாகத் தம்மைவியவாத எளிவந்த தன்மையும் புலனாகும். கடையனுக்கும் கடையனாகத் தம்மை நிறுத்திக் கொள்ளும் உயர்ந்த சான்றாண்மையின் இருப் பிடம் தேடித் தெய்வமும் செல்லும் என்னும் அருட் சிறப்பினை இப்பாடல் தெளிவுறுத்துகின்றது.

பாசம் பரஞ்சோதிக் = H

கென்பாய் இராப்பகல் காம் பேசும்போ தெப்போதிப்

போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ?

நேரிழைய்ர்ய்! நேரிழையீர்! சீசி! இவையுஞ்

சிலவோ? விளையாடி ஏசும் இடமீதோ?

விண்ணோர்கன் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதங்

தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன்

தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்? யாம்

ஆரேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/12&oldid=592176" இலிருந்து மீள்விக்கப்பட்டது