பக்கம்:பாவைப் பாட்டு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 119

அறிய முடியாதவன் சிவபெருமான் என்றபடி இவ்வாறு மூல பண்டாரமாய், மூல முதற் பொருளாய் விளங்கும் சிவபெரு மான், தன் துணைவியாகிய சத்தியாம் உமையம்மையுடன் அடியவர் நெஞ்சினுள் புகுந்து நிறையும் மேன்மையுடை யவன் ஆதலின் “பந்தணை விரலியும் நீயும், நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே’ என்றார். “பந்தினை யணைந்த விரல்களையுடைய உமையம்மையும் நீயும் உன்னுடைய அடியவர்களது பழமை வாய்ந்த குடிசை களாகிய உள்ளங்கள் தோறும் உவந்து திருக்கோயில் கொண்டு விளங்கும் மேலானவனே’ என்று சிவபெருமானை மாணிக்கவாசகப் பெருமான் அழைப்பது ஓர் ஆழ்ந்த நுண் பொருளைக் கொண்டிருப்பதாகக் கொள்ளலாம். பந்தினைக் கையிலேந்தியிருந்தலும் அதுகொண்டு விளையாடுதலும் மகளிர் செயல்களாகும். ‘பந்துசேர் விரலாள்’ எனப் பாங்குடன் தம் பதிகத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுவர். புறத்தே உலகத்திற் காணலாகும் குடிசைகள் கால வெள்ளத்தில் கரைந்து நைந்து சிதைந்து போகும். அதுபோல ஆன்மாக்களும் திருவருளினால் கரைந்துருகி உலகக்கட்டு ஒருநாள் சிதைந்து காணப்பெறும். ஆயினும் அவ்வன்பர் உளமாகிய குடில்களில் ஆண்டவன் திருக்கோயில் கொண்டு உறைகிறான். இதனைத் திருநாவுக்கரசர் பெருமானும் தம் திருவையாற்றுப் பதிகத்தில் (8)

ககமெலாங் தேயக் கையால்

காண்மலர் தொழுது துவி

முகமெலாம் கண்ணிர் மல்கமுன்

பணிக்தேத்துங் தொண்டர்

அகமலாற் கோயில் இல்லை ஐயன் ஐயாற னார்க்கே

துறவுநிலைக்குப் பெயர்போன பட்டினத்தடிகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/120&oldid=592178" இலிருந்து மீள்விக்கப்பட்டது