பக்கம்:பாவைப் பாட்டு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருப்பள்ளி எழுச்சி

அருள்கனி சுரக்கும் பிரளய விடங்ககின் செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற அமையாக் காட்சி இமையக் கொழுங்தையு முடனே கொண்டுஇங்கு எழுந்தருளத் தகும் எம் பெருமானே

தாயுமான தயாபரர்,

கெஞ்சகமே கோயில் கினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

என்றும் அன்பர் உள்ளமே அம்மையும் அப்பனும் எழுந்தருளி உறையும் இடம் எனக் குறித்திருப்பதனை இங்கு நினைத்துப் பார்க்கத் தகுவனவாகும்.

“செந்தழல் புரை திருமேனியுங் காட்டி’ என்ற தொடர் ‘சிவந்த நெருப்பைப் போன்ற நிறம் வாய்ந்த வடிவத்தைக் காட்டியருளி’ என்னும் பொருளை உணர்த்தி நிற்கிறது.

‘திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி’ என்ற தொடர், சிவபெருமான் திருப்பெருந்துறையில் கோயில் கொண்டு உறைகின்றான், என்பதனைக் குறிக்கின்றது.

“அந்தணன் ஆவதும் காட்டி’ என்ற அடுத்த தொடர், வேதியனாக உருக்கொண்ட நிலை காட்டி’ என்பதனை உணர்த்தும். குருந்தமரத்தினடியில் இறைவன் வேதியனாக உருத்தாங்கி வந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய் தருளிய செயலை இத்தொடர் குறிக்கின்றது எனலாம்.

மேலும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளிரும் சிவபெருமான் மாணிக்கவாசகப் பெருந்தகையாரை இவ்வுலகப் பற்றுப் பாசங்களின்றும் உய்விப்பான் வேண்டி, வேதியர் வடிவந்தாங்கி வந்து, குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/121&oldid=592179" இலிருந்து மீள்விக்கப்பட்டது