பக்கம்:பாவைப் பாட்டு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 121

கொண்டு, மாணிக்கவாசகப் பெருமானாருக்கு உபதேசித்த செயலைக் குறிப்பிட்டு நின்றது. “ஆண்டாய்’ என்ற சொல் இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட நிலையைச் சுட்டுவதாகும்.

இவ்வாறு உயிர்களைப் பக்குவப்படுத்தி, அவ்வுயிர்களுக்கு உரிய க்ாலத்தில் அருள் செய்து ஆட்கொள்வதனையே கடப் பாடாகக் கொண்டிருக்கும் சிவபெருமானே! நீவிர் திருப்பள்ளி யினின்றும் நீங்கி எங்களை ஆட்கொண்டருள்க என மாணிக்க வாசகர் மனங்கசிந்து வேண்டுகின்றார்.

முந்தியும் முதல்ாடு

இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர்,

யாவர்மற்(று) அறிவார்? பந்தனை விரலியும்

நீயும்கின் அடியார் பழங்குடில் தொறும் எழுங் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு

மேனியும் காட்டித் திருப்பெருங் துறையுறை

கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும்

காட்டிவங்(து) ஆண்டாய்! ஆரமுதே பள்ளி

எழுந்தரு ளாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/122&oldid=592180" இலிருந்து மீள்விக்கப்பட்டது