பக்கம்:பாவைப் பாட்டு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது திருப்பாடல்

இதற்கு முந்தைய திருப்பாட்டில் சிவபெருமானின் உண்மை நிலையினையும், உலக உயிர்களை உய்விப்பான் வேண்டித் தான் விளக்கங் காட்டும் மூவகைத் திருமேனி களையும் உணர்த்திய மாணிக்கவாசகர் ‘விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே’’ என்று இத்திருப்பாடலைத் தொடங்குகின்றார், சிவபெருமான் உலக உயிர்களுக்குப் பேரின்ப நிலையினைத் தர அருளுள்ளம் கொள்கிறார். விழுப்பொருள்’ என்றால் மிகச் சிறந்த பொருள் என்று பொருள் வரும், “விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருள்’ என்பதனால் விண்ணில் வாழ்பவர்களும் அத்துணை எளிதாகச் சிவபெரு மானை நெருங்கிவிட முடியாது என்பது புலப்பட்டவாறாம். ஆயினும் மண்ணுலகத்தில் வாழும் அடியவர் இறைவன் மாட்டு ஆராக்காதல் கொண்டு அவன் எழுந்தருளும் கோயி லாகத் தங்கள் உள்ளத்தை வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு அவனுடைய அருள் எளிதாகக் கிட்டிப் பேரின்ப நிலைக்கு வழிவகுக்கின்றது ‘உனதொழுப்படி யோங்கண் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே’ என்ற தொடர். உன் விருப்பத்தின் காரணமாகவே உலக உயிர்கள் இம்மண் ணுலகில் பிறப்பெடுக்கின்றனவேயன்றி அவ்வவற்றின் ஆசை காரணமாகப் பிறப்பெடுக்கவில்லை என்பதனை இத்தொடர் கொண்டு உணர்த்தினார், ‘வான் பழித்து மண்புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்” என்னும் திருவாசகத் தொடர் இக்கருத்தினை அரண் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/123&oldid=592182" இலிருந்து மீள்விக்கப்பட்டது