பக்கம்:பாவைப் பாட்டு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 125

“வண் திருப் பெருந்துறையாய்’ என்று சிவபெருமானை விளிக்கின்றார். சிவன் திருக்கோயில் கொண்டு திகழும் திருப் பெருந்துறை நிலவளம், நீர்வளம் பெற்றிருப்பதோடு, வாழும் உயிர்களை வான் அனைய அருள்பெற்று உய்ய வைக்கும் திருத்தலமாகவும் துலங்குகின்றது என்பதனை இத் தொடர் உணர்த்தி நிற்கிறது. பரம்பரை பரம்பரையாக நாள்தோறும் திருக்கோயிலுக்குச் சென்று வலம்வந்து ஐந் தெழுத்தினை ஒதி, சிவபெருமானுக்குப் பல்லாற்றானும் பாங்குறத் திருத்தொண்டு செய்து அவனுடைய அடியாராகத் திகழும் செம்மாப்பு உடையராயிருத்தலின் வழியடியோம்’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து, ‘'கண்ணகத்தே நின்று கணிதரு தேனே’ என்றார். தேன் உடலுக்கு உயிர்ப் பொருளாய் அடைந்து நலம் பயப்பது; நெடுநாள் வாழவைப்பது. ஈண்டுக் கண்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். சிவபெருமான் ஞானத்தைத் தந்து, உயிர்களைப் பேரின் பத்தில் திளைக்குமாறு செய்கிறான். கசப்பு மருந்து களை நோய்க்காலத்தே உண்ண, அக்கசப்பு மருந்துகளோடு தேன் சேர்த்து உண்ணுதல் வேண்டும். தேனையே உண்ணும் பொருளாகக் கொண்டுவிட்டால் மகிழ்ச்சி மிகுவதற்குக் கேட்கவா வேண்டும்? சிவபெருமான் உடலுக்கு நலம் பயக்கும் தேனாய், உயிருக்கு உரமூட்டும் தேனாய்த் திகழ்கிறான் என்பது இங்கு நாம் காண வேண்டிய குறிப்பாகும்.

‘தேனே என்றவர் அடுத்துக் ‘கடலமுதே’ என்று சிவபெருமானை விளிக்கின்றார். இங்கும் ஒரு குறிப்பைக் காணலாம், தேவரும் அசுரரும் கடல் கடைந்து அமுதம் எடுக்க முற்பட்டனர். ஆனால் முதற்கண் நஞ்சு வெளிப் பட்டது. அதனைக் கண்ட தேவரும் அசுரரும் அஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/124&oldid=592183" இலிருந்து மீள்விக்கப்பட்டது