பக்கம்:பாவைப் பாட்டு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருப்பள்ளி எழுச்சி

யோடினர். ஆனால் சிவபெருமான் உலக உயிர்கள் வாழ வேண்டி, அக்கொடிய நஞ்சினையும் உண்டு நீலகண்ட ரானார். தேவரையும் அசுரரையும் வாழவைத்தார். நஞ்சு வெளிப்பட்ட பின்னரே அமுதம் வந்தது, இதனால் அனை வரும் பயன்பெற்றனர். அமுதம் பிறர் பெறத் தான் நஞ்சை உண்டு “நீலமணி மிடற்றனானார். நஞ்சுண்ட கண்டனா யிருந்தாலும் சாவாது நீண்ட நெடுங்காலம் ஏன்? எஞ்ஞான்றும் வாழுபவரானார். ஒருவர் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டுமென்றால் நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே” என்று வாழ்த்த வேண்டும் என்ற அளவிற்குச் சிவபெருமானின் நிலைத்த தன்மை புறநானூற்றுக் காலத்திலேயே புலப்பட்டது.

கடலமுதே’ என்றவர் ‘கரும்பே’ என்றார். கரும்பு சுவை நிரம்பியது. கரும்பைக் கடித்துத் தின்றால் கிடைக்கும் சாறு சுவைமிக்கது. எந்த வயதினரும் விரும்பிக் குடிப்பது: சிற்சில நோய்களுக்கு மருந்தாகவும் அமைவது. எனவே மாணிக்கவாசகர் * கரும்பே’ எனச் சிவபெருமானை அழைத்தார். திருநாவுக்கரசர் பெருமானும்,

கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க் குழற்பாவை கல்லாரினும் தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே

திருவிடைமருதுார் . 10

என்று திருவிடைமருதூர்ஈசன்.பழம்,கரும்பு, பாவை முதலிய எவரினைக் காட்டிலும், தன்னை அடைக்கலமாக அடைந்த அடியவர்களுக்கு இனியனாக இருக்கின்றான் என்று பாடி யுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/125&oldid=592184" இலிருந்து மீள்விக்கப்பட்டது