பக்கம்:பாவைப் பாட்டு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 125

‘விரும்பு அடியார் எண் அகத்தாய்’ என்ற அடுத்த தொடர், அன்பு வடிவமான தொண்டர்களின் கருத்தில் உள்ளவனே என்னும் பொருளினைக் குறித்து நின்றதாகும். அடியவர் உள்ளக்கிழியில் சிவனின் உருவெழுதி நிற்கின்றனர் என்பதாம்.

“உலகுக்கு உயிராவாய்’ என்ற தொடர் உலக உயிர் களுக்கெல்லாம் சிவபெருமான் உயிராக - தலைவனாக - நாயகனாக விளங்கும் தன்மையை விளக்கி நின்றதாகும்.

‘எம்பெருமான்: பல்ளி எழுந்தருளாயே’ என்ற இறுதி அடி, கண்ணை மூடிக் கண்ணைத் திறக்கும் நேரங்கூடத் தன் நெஞ்சினின்றும் நீங்காதவனாய் நிலைத்துநிற்கும் சிவபெரு மான் பள்ளியைவிட்டு எழுந்து தம்மை ஆட்கொண்டு அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்.

விண்ணகத் தேவரும்

கண்ணவும் மாட்டா விழுப்பொரு ளே! உன

தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து

வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம் கண்ணகத் தேகின்று களிதரு தேனே! கடலமு தே! கரும்

பே’ விரும் படியார் எண்ணகத் தாய் உல

குக்(கு) உயிரானாய் எம்பெரு மான் பள்ளி

எழுந்தரு ளாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/126&oldid=592186" இலிருந்து மீள்விக்கப்பட்டது