பக்கம்:பாவைப் பாட்டு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது திருப்பாடல்

சென்ற திருப்பாட்டில் இம்மண்ணகத்தே வாழும் உயிர்களைச் சிவானந்தக் கடலில் ஆழ்த்தி, பேரின்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்து, அப்பெருமான் உயிர் களுக்குத் தேனாய், கடலமுதாய், கரும்பாய் விளங்கும் நிலையினைப் புலப்படுத்திய மாணிக்கவாசகர், புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்போக்குகின்றோம் என்று சீரிய கருத்தமைதி உடையதாய்த் தொடங்கும் இத்திருப் பாடலில்-திருப்பள்ளியெழுச்சியில் அமைந்துள்ள இறுதிப் பாடலில், இம்மண்ணுலகத்தின்கண் திருமால், பிரம்மன் ஆசையுறும்படி எம்மை அடிமை கொள்ளவேண்டும் என்று விரும்பி வேண்டி விண்ணப்பம் செய்யத் தொடங்குவாராய், அம்முழு முதற்பொருளாக விளங்கும் சிவபெருமானை-- பிறவா யர்க்கைப் பெரியோனை ஆரமுதே’ என விளித்தார். அமுது உண்பார்க்குச் சாவு இல்லை; ஆரமுதே கிடைத்தால் -அது கிடைத்து உண்பவர் இருப்பின் அவர்க்குச் சாவா மூவா நிலை வந்து சித்திக்குமன்றோ! உலகில் கிடைக்கும் அமுது உண்ண உண்ணத் திகட்டுவது; இறையனுபவம்பரமானந்தம் - பேரின்பம் என்னும் ஆரமுது உண்ண உண்ணத் திகட்டாதது. பிறவியாகிய கடலை நீந்த வேண்டு மானால் - நீந்திக் கரை சேரவேண்டுமானால் மீண்டும் இவ்வுலகில் பிறக்கமால் இருக்கவேண்டுமானால் ஆண்டவன் அருளும் ஆரமுது பயன்படும். மாணிக்கவாசகர் சிவபுராணத் தில் ஒர் உயிர் எத்தனை பிறப்பெடுத்து அல்லல் உறுகின்றது என்பதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/127&oldid=592187" இலிருந்து மீள்விக்கப்பட்டது