பக்கம்:பாவைப் பாட்டு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 127

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன்

-திருவாசகம்; சிவபுராணம்: 26-32

என்று கூறுவர். ‘இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி’ என்றபடி இந்தப் பிறவியில் நாம் வாழும் வகையில் வாழ்ந்தால் பிறப்பென்னும் பேதமையை நீக்கிக் கொள்ளலாம். எனவே பிறவி என்னும் பற்றின் கொள்கலமான ஒன்றிலிருந்து விடுபட வேண்டு மானால் முதலில் பிறப்பை அறுக்கக்கூடிய இடமாக விளங்கும் பூமியிற் போய்ப் பிறத்தல் வேண்டும். அவ்வாறு பிறப் பெடுக்கவில்லையென்றால் ஒவ்வொரு நாளினையும் நாம் வீணாகப் போக்குகின்றோம் என்று பொருள். ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் சிவசிந்தனையோடு கழிய வேண்டுமே பன்றி, அவசிந்தனையாகக் கழியக்கூடாது.

சிவஞான சித்தியாரின் ஆசிரியராம் அருணந்தி சிவாச்சாரியார்,

மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்கு காயம் ஆனிடத்து ஐந்துமாகும் அரன்பணிக்காக அன்றோ வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்தனை அர்ச்சிப்பர் ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அக்தோ

என்று குறிப்பிட்டுள்ளபடி வானுலகில் உள்ளவரும் மண்மேல் வந்து சிவனை அருச்சனை செய்து உய்தி பெறுவர்விட்டின்பம் பெறுவர் என்றால், மனிதப்பிறவியெடுத்தோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/128&oldid=592197" இலிருந்து மீள்விக்கப்பட்டது