பக்கம்:பாவைப் பாட்டு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருப்பள்ளி எழுச்சி

“ெஅவனருளாலே அவன் தான் வணங்கி ‘ பெறற்கரிய பிறவியைப் பயனுடையதாக்கி, இனிப் பிறவாமை என்னும் நிலைக்கு உயர்த்தப் பெற்றுச் சிவன் தன் சேவடி அடைய வேண்டும் என்பர்.

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவையார். சிவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்பர் திருநாவுக்கரசர்.

பிறந்தேன்கின் திருவருளாலே பேசின் அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவா காளே என்றும்,

துன்பம் நும்மைத் தொழாத நாட்கள் என்பாரும் இன்பம் நும்மை ஏத்து நாட்கள் என்பாரும்

“திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்” என்பதனால் காக்கும் கடவுளாம் திருமா லும் படைக்கும் கடவுளாம் பிரம்மனும் இப்பூமியிற் பிறந்து வாழ வேண்டும் என்று கருதினர் என்றார்.

“நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ‘ என்று அடுத்துக் கூறினார்.

“நின் பரந்து விரிந்த பொய்யாத அருட்காட்சியாக விளங்கும் அருட்சத்தியும் தேவரீராகிய நீரும் இவ்வுலகின் கண்ணே போந்தருளி எங்களை அடிமைகொள்ள வல்லவனே’ என்பது இத்தொடரின் பொருளாகும். இங்கு ‘அலர்தல்’ என்ற சொல், உயிர்கள் தோறும் மறைந்து நின்று இறைவன் அவ்வுயிர்களை வினைப்பயன் நுகருமாறு செய்தும் மனப் பக்குவமும் செய்துவந்த திரோதன சத்தி அருட்சத்தியாக வெளிப்படும் திறத்தினை உணர்த்தி நின்றது என்பர். உலகில் வாழும் எந்த உயிரின் கருணையும் அளவும் காலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/129&oldid=592198" இலிருந்து மீள்விக்கப்பட்டது