பக்கம்:பாவைப் பாட்டு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3.curr. 129

கருதியதாகலாம். எந்த உயிரின் ஆற்றலுக்கும் அருளுக்கும் ஒரி எல்லை இருக்கும். ஆனால் சிவனோ வரம்பற்ற ஆற்றல் உடையவன்; எல்லையற்ற அருளும் உடையவன். எனவே தான் எவரையும் சாகச் செய்யும் கொடிய நஞ்சைத் தானே உண்டு, தேவர்களையும் அசுரர்களையும் இறப்பிலிருந்து காப்பாற்றினான், அவன் திருவருள் உறுதியானது, உண்மை யானது என்ற காரணத்தினால் “மெய்க்கருணை’ என்றார் மணிவாசகர். எனவே உலக உயிர்களை உய்விக்கும் பொருட்டு, உலக உயிர்களுக்கு ஈடேற்றம் வழங்கும் காரணமாக உமையம்மையுடன் போந்த சிவபெருமான் உலக உயிர்கள் அனைத்தையும் அடிமைகொள்ளும் ஆற்றல் மிக்கவன் என்பதனைப் புலப்படுத்த எமை ஆட்கொளல் வல்லாய்’ என்றார். யான் விரும்புவதெல்லாம் எங்களை ஆட்கொள்ளவேண்டும் என்பதே என்பதனைத் தெளிவுறுத்தி, இறைவனைத் துயிலிலிருந்து எழவேண்டும், எழுந்து அருள் செய்யவேண்டும் என்பாராய் ‘ஆரமுதே பள்ளி எழுந் தருளாயே என்றார்,

இவ்வாறு திருவாசகம் என்னும் தேனினை உலக உயிர் கள் உய்யுமாறு ஆக்கித்தந்த மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடியருளினார்.

புவனியிற் போய்ப் பிற

வாமையில் நாள் காம் போக்குகின் றோம் அவ

மே, இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற

வாறென்று கோக்கித் திருப் பெருக் துறையுறை

வாய்! திரு மாலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/130&oldid=592201" இலிருந்து மீள்விக்கப்பட்டது