பக்கம்:பாவைப் பாட்டு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3. run”. 13

மங்கையரின் பற்களுக்கு அதனை உவமை கூறியது எண்ணத் தக்கது. எனவே முருகியற்சுவை தோன்ற, ‘முத்தன்ன வெண்ணகையாய்” என்று விளித்துள்ளார்.

இத்தகைய நங்கை முன்னைய நாட்களில் எல்லாம் ஏனையோர்க்கு வழிகாட்டியாக வைகறைப் பொழுதிலே துயில் நீங்கி எழுந்து வீதிக்கு வந்து ஏனைய பெண்களை அழைக்கச் செல்வது வழக்கம். அப்பொழுது சிவபெருமானின் பல்வகைச் சிறப்புகளையும் குறிக்கும் திருப்பெயர்களைச் சொல்லிச் சொல்லி வாயூறிப் போவாள். அதனை இப் பொழுது மறந்து அப்பெண் துரங்குவதை, எழுப்பவந்த பெண்கள் நினைவுபடுத்திப் பேசுகிறார்கள். நங்கையே! முன்பெல்லாம் முன்கூட்டியே எழுந்து வந்து என்னுடைய அத்தன், ஆனந்தன், அமுதன் என்று தித்திக்கப் பேசி மகிழ்விப்பாயே! இப்பொழுது உறக்கம் கொள்வது ஒவ்வுமா? எழுந்து வந்து கதவைத் திறப்பாய்’ என்று கூட்டமாக வந்த பெண்கள் கூப்பிடுகின்றனர். இப்பகுதியில் மணிவாசகப் பெருமான் இறைவனுக்குரிய பல்வேறு திருப்பெயர்களில் அத்தன், ஆனந்தன், அமுதன் என்ற மூன்றை மட்டும் சிறப்பாக எடுத்துச் சுட்டுதல் சிந்தித்து மகிழத்தக்கது. அத்தன் என்ற சொல் தந்தையைக் குறிக்கும். இதுவே அச்சன் என்று மருவிய வடிவமாகவும் வேறொரு பாடலில் மணிவாசகரால் குறிக்கப் பெற்றுள்ளது. இன்றைய மலையாள மொழியிலும் இச்சொல் இப்பொருளில் வழங்கி வருதல் காணலாம். தனக்கெனத் தந்தை இல்லாதவனாய் முடிவில், அனைவர்க்கும் தந்தையாய் விளங்குபவன் பரம் பொருளாகிய சிவபெருமானே என்பது தெளிவாகும். மாணிக்கவாசகர் மற்றும் ஒரு பாடலில் அம்மையே அப்பா என்று அழைத்தலும் இங்கு எண்ணத்தக்கது. அப்பர் பெருமான் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்’ என்று பாடுகிறார். ஆருரர், அத்தா உனக்காளாய் இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/14&oldid=592207" இலிருந்து மீள்விக்கப்பட்டது