பக்கம்:பாவைப் பாட்டு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 பாவைப் பாட்டு

அல்லேன் எனலாமே என்று இயம்புகிறார். எனவே, பக்திப் பெருக்குடைய பாவைப் பெண் இறைவனை அத்தன் என்று போற்றுகிறாள். ஆனந்தம் என்பது இன்பத்தைக் குறிக்கும். உலகில் துய்க்கும் பல்வேறு இன்பங்கள் தொடர்ந்து நிலைப் பவை அல்ல; தோன்றி மறைபவை. இறைவன் வழங்கும் பேரின்பமே என்றும் நிலைப்பது. அதுவே ஆனந்தம் எனப் படுவது. அதனை அளிக்கும் பரம்பொருள் ஆனந்தன் என்றே போற்றப்பெறுகிறான். இப்பெயர் இறைவனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் கருதிக் கொண்டுள்ள நிலையில் அமைவது. அவன் வழங்கும் பேரின்பத்திளைப்பின் புலப்பாடாக இச்சொல் வெளிப்படுவது. மூன்றாவது நிலை யில் ‘அமுதன் என்று பாவைப்பெண் இறைவனைச் சுட்டு கிறாள். இச்சொல் இறப்பை நீக்குபவன் என்ற பொருளைத் தருகிறது. எனவே, உயிர்களுக்குச் சாவா, மூவாத் தன்மை யைத் தரும் இறைவன் அமுதன் என்று போற்றப்பெறு கிறான். எனவே பாவைப்பெண் சிவபரம்பொருளை அத்தன், ஆனந்தன், அமுதன் என்று தித்திக்கப் பேசி, வாயூறி நிற்பது வழக்கம். அத்தகைய பெண், தோழியர்களால் இடித்துரைக்கப் பெற்றதும் எழுந்து வந்து சசன்பால் பற்றுடையவர்களே! பழைய அடியார்களே! பாங்கு மிக்கவர் களே! யாமோ புதிய அடியவர். எமது சிறுமையைப் போற்றி ஆட்கொள்ளக் கூடாதோ’ என்று அவர்கள் வாசகத்திலேயே விடையிறுத்தாள். அவள் உரைகேட்ட ஏனைய பாவைப் பெண்கள், “உன்.பக்திச் சிறப்பு எங்களுக்கு நன்றாகத் தெரியும். எத்துக்கள் எதற்கு? மனத்துய்மை வாய்ந்த மகளிர் அனைவரும் நம் சிவனைப் பாடமாட்டார்களா? எங்களை நீ இடித்துப் பேசும் இச்சொற்களெல்லாம் எமக்கு வேண்டுவனiே” என்ற அமைதி அடைகின்றனர். இத்திருப் பாட்டில் மனத்துாய்மையினால்தான் இறைவனை அடைய முடியும் என்ற உண்மை வலியுறுத்தப்பெறுகிறது. அடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/15&oldid=592208" இலிருந்து மீள்விக்கப்பட்டது