பக்கம்:பாவைப் பாட்டு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது திருப்பாடல்

“ஒண்ணித்தில நகையாய்’ எனத் தொடங்கும் நான்காம் பாட்டு சிவபெருமானின் அளப்பரிய பெருமை யினையும் தொண்டராய்க் கூடிப் பரவும் நெறியினையும் எடுத்தியம்புகிறது. மகளிர் உரையாட்டில் வேத விழுப் பொருளாய் விளங்கும் விண்ணவர் பெருமானை மெழுகைப் போல உருகிக் கசியும் மனம் பெறவேண்டுமென்பது உரைக்கப்பெறும்.

பாட்டின் கருத்தைக் காண்போம் : ‘முத்தனைய ஒளி மிக்க நகையுடையவளே! இன்னும் பொழுது உனக்குப் புலர வில்லையா?’ எனத் தோழிமார் கேட்கின்றனர். அப்போதே உறக்கம் கலைந்த புதிய தோழி, கிளிபோலும் மொழி பேசும் நம் தோழியர் எல்லாரும் வந்துவிட்டனரா?’ எனக் கேட்கின்றாள். உடனே தோழியர், “வேண்டுமானால் எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக்கொள்; நாங்கள் அதனைச் சொல்லமாட்டோம். அந்த ஒரு சிறுபோதும் தூக்கத்தில் காலத்தைப் போக்கலாம் என்று கருதாதே! விண்ணவர்களுக் கெல்லாம் மருந்தைப் போன்றவனும், வேதங்களெல்லாம் பரவும் பொருளாகவும் கண்ணுக்கினியனாகவும் அமைந்த சிவபரம்பொருளைப் பாடிக் கசிந்து உள்ளம் உருக நாங்கள் நிற்கின்றோம். நீயே வந்து எண்ணிப்பார்த்துக்கொள்; எண்ணிக்கையில் குறைந்தால் நீ மறுபடியும் துயிலப்

போகலாம்’ என்று உரைக்கின்றனர்.

“ஒண்ணித்தில நகையாய்’ என்று விளிப்பதை எண்ண வேண்டும். முத்தன்ன வெண்ண கையாய் என்று முன்னைப்

பாட்டிலும் மொழிந்ததும் இதே கருத்தில்தான்; அழகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/17&oldid=592211" இலிருந்து மீள்விக்கப்பட்டது