பக்கம்:பாவைப் பாட்டு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. Lum. 17

முத்துப்போலும் சிரிக்கத் தெரிந்த இப்பெண் சிவானுபூதியில், பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்றுருகிப் போகிறாள். ‘மருவினிய மலர்ப்பாதம் மனதில் வளர்ந்து உள்ளுருகித் தெருவுதொறும் மிகவலறிச் சிவபெருமான் என்றேத்தி’ என்று இந்த அனுபவத்தைச் சுட்டுவர். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்பதுதானே பரங்கருணைத் தடங்கடலைச் சேர்தற்குரிய நெறியாகச் செப்பப்பெற்றது! ‘இன்னம் புலர்ந்தின்றோ!’ என்பதுதான் எத்தனை அரியபொரு ளுடைய மொழி ஊர்க்கும் உலகத்திற்கும் ஏற்பட்ட இந்த விடியல், பரம்பொருளைத் தொழுதற்குரியதாக நமக்குப் புலர்வதன்றோ நாம் பெறும்பேறு. பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் என்று பாரதி கூறுவதும் எண்ணத் தக்கது. வந்து நீ எண்ணிப்பார், எல்லாரும் வந்தார் என்பது கூட்டு வழிபாட்டு நெறிக்கு முயலுகின்ற சீவான்மாக்களின் எளிய நிலையைச் சொல்லுகின்றது.

சிவபெருமான் ஆலகாலத்தை உண்டு அமரரைப் பாது காத்தான். அதனால் தேவர்களின் அருந்துன்பத்தை நீக்கி னான். தேவர்களுக்கு அருமருந்து எனப் புகழப்பெற்றான். சாவா மூவா மருந்தாக நின்று பிறப்பென்னும் நோயைத் தீர்க்கும் முழுமுதலாகும் பெருமையினை இச்சிறுமியர் பேசுவது அவனருளால் உணரப்பெற்ற ஞானமன்றோ? வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ என்றும் மணிவாசகப் பெருந்தகை பேசுவர். ஆழம், அகற்சி, நுணுக்கம் ஆகிய மூன்று கனபரிமாணங்களில் யாண்டும் நீக்கமற நிறைகின்ற ஒரு பேராற்றலை வேதங்களால் உள்ள வாறு விளக்கல் இயலுமோ? எனவேதான் மறைகளுக்கும் எட்டாத சேவடி எனப்பட்டன. இறைவன் கண்ணுக்கு இனியான். ‘பூசுவதும் வெண்ணிறு; பூண்பதுவும் பொங் கரவம்; பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி” என்றும், வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/18&oldid=592212" இலிருந்து மீள்விக்கப்பட்டது