பக்கம்:பாவைப் பாட்டு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருப்பாடல்

முன்னைத் திருப்பாட்டில் கசிந்துருகிக் கண்ணுதற் கடவுளின் கருணை பெற வேண்டும் என்று இயம்பினார் வாதவூரர். இந்த ஐந்தாம் திருப்பாட்டில் திருமாலும் நான் முகனும் அடிமுடிதேடி அறியப்படாத அருணகிரியின் அருமை பெருமைகளைப் பேசுகிறார். காமம், வெகுளி, மயக்கம் என்ற இழி பொருளில் இருந்து விடுபட்டு, ஒளிக்கதிராய்த் தோன்றும் அவனது அருளைப் பற்றிக் கொண்டு உய்வதற்கு மனிதன் முயலவேண்டும் என்னும் கருத்தை இவ்வரிய பாடல் விளக்குகிறது. இப்பாடலும் நாடகப் பாங்கில் அமைந் துள்ளது. பாவைப் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பாவையின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றனர். ‘திருமாலும் நான்முகனும் அறியமுடியாத மலைபோலும் அவனை அறிந்துவிட்டது போலப் பொய் பேசுகின்ற வஞ்சகியே! உன் வாயிற்கதவைத் திறப்பாயாக. அல்லது உன் வாயைத் திறந்தாவது பேசுக. மண்ணும் விண்ணும் பிற உலகங்களும் அறிவதற்கு அரிதாய பெருமானை, பிழைபோக்கி நம்மை ஆட்கொண்டு வளர்க்கின்ற அப்பரம் பொருளை நாங்க வளிங்கே பாடுகின்றோம். சிவனே சிவனே என்று அவ ன் பெயர்களைக் கூறுகின்றோம். அவன் பண்புகளையும் திருப் பெயர்களையும் நாங்கள் கூறக் கேட்டும் உணராமல் நீ உறங்குகிறாயே! மணம் வீசுகின்ற குழலை உடையவளே! உன் தன்மை இதுவோ?’ என்று இடித்துப் பேசுகின்றனர்.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய தலம் திருவண்ணாமலை. எனவே இத்தலத்தின் தோற்றத்திற் குரிய ஒரு புராணக் கதையை இப்பாடலில் கூறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/21&oldid=592221" இலிருந்து மீள்விக்கப்பட்டது