பக்கம்:பாவைப் பாட்டு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛。 LII"» 21

பொருத்தமே. திருமால் பன்றியாகவும் நான்முகன் அன்ன மாகவும் தேடிக் காணாது திகைத்த செயல் ஓர் அரிய உண்மையை உணர்த்துகிறது. கண்ணப்பர்க்கும் பூசலார்க் கும் எளிவந்த நிலையில் அருள் செய்த பெருமான், திருமாலுக்கும் நான்முகனுக்கும் காணாது மறைத்தான். அங்ஙனம் மறைத்தமைக்கும் காரணம் உண்டு. படைத்தல் தொழிலும் காத்தல் தொழிலும் முழுமுதற் கடவுளாகிய சிவபரம்பொருளின் ஆணைவழி இயற்றும் இவ்விரு தெய்வங் களும் தாம்தாம் பெரியர் என்று தருக்கியும் செருக்கியும் நின்றனர். அவர்தம் ஆணவ இருள் நீங்கும் பொருட்டுப் பேரொளிப் பிழம்பாக, சுயம்புவாகப் பெருமான் உருக் கொண்டான். பஞ்சபூதத் தலங்களில் தேசோலிங்கத் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அன்னப்பறவை வடிவெடுத்து உயரப் பறந்து சென்ற பிரமன் முடியைக் காணமுடியாது திகைத்துக் கண்டுவிட்டதாகப் பொய்பேசினான். வராக வடிவம் எடுத்து அடியைத் தேடிச் சென்ற திருமால் காண முடியாமையினை ஒத்துக் கொண்டார். மலை இலக்காக வெளிப்பட்டும் ஆணவ இருளில் நின்ற இருவர்க்கும் முடிவாக அருள்புரியும் வகையில் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தார் இறைவன். அத்தகைய அறிதற்கு அரிய பெருமானை நாமறிவோம் என்று பொய்யுரைகளைப் பேசு கின்ற பாலும் தேனும் கலந்தாற் போல் இனிக்கப் பேசுவதில் வல்ல படிறியே! என்கின்றனர் தோழியர். “தித்திக்கப் பேசுவாய்’ என்று முன்னைப் பாட்டில் பொதுவாகக் கூறப் பெற்ற பெண், இப்பாட்டில் பாலூறு தேன்வாய்ப் படிl’ என்று உவமைநலம் தோன்ற உரைக்கப் பெற்றாள். உன் மொழிகள் பாலும் தேனும் கலந்தனவாய்த் தித்திக்கின்றன: எனினும், அவையெல்லாம் பொய்ம்மொழிகள் அன்றோ? இந்த ஞாலமும் விசும்பும் பிற உள்ள எல்லாப் பொருள் களும் சேர்ந்தாலும் அறிவதற்கு அரியன் சிவபெருமான்.

սո -2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/22&oldid=592223" இலிருந்து மீள்விக்கப்பட்டது