பக்கம்:பாவைப் பாட்டு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாவைப் பாட்டு

இன்ன நிறத்தன், இன்ன தன்மையன் என்றுரைக்க மாட்டாத தன்மையன் அப்பெருமான். உலகத்துள்ள எல்லாப் பொருள் களிலும் உட்பொருளாய் அப்பொருள்களாலும் உணர மாட்டாத உள்ளிருப்பாய் இருப்பதன்றோ அச்செம்பொருள்! அத்தகைய பெருமைக்குரிய இறைவன் தன்னுடைய கோலங் காட்டிக் குற்றங்கடிந்து நம்மை ஆட்கொண்டு அருள்வான் என்ற உண்மையைப் பாடி, சிவனே சிவனே என்று ஒல மிடினும் துயில் உணராமல் படுத்திருக்கின்றாயே! உன் கூந்தலில் நறுமணம் வீசுகிறது. ஆயினும் உலகனைத்தும் பரந்த அப்படரொளிப் பரப்பின் பெருமை இன்னும் உன்னை வந்து எட்டவில்லையே! என்கின்றனர்.

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சிலமும் என்பன மணிவாசகர் தம் வாழ்க்கையில் கிடைத்த தன்னனுபவங்கள் எனலாம். அம்மெய்ம்மை உணர்வுகளை உலகர் அறியும் வண்ணம் இவ்வாறு உணர்த்துகின்றார்.

திருப்பொற்சுண்ணம், திருச்சாழல், திருவுந்தியார் என்றாற்போல மகளிர் விளையாட்டுகளால் ஞானநெறி யினைக் கற்பிக்கும் பாங்கிற் பாடிய இப்பாடல்களில் யாவற்றையும் கடந்து நிற்கும் இறைவனின் தன்மையும், யாவற்றுள்ளும் உள்ளடங்கி நிற்கும் தன்மையும், தன்னைத் தொழுவார்க்குக் கோலமும் சீலமும் காட்டி ஆட்கொள்ளும் அருட்பண்பும் அருமையாகக் கூறப்பட்டன. இப்பாட்டில் பயிலும் வசைமொழிகள் கூட எவ்வளவு உயர்ந்த நிலையில் அமைகின்றன.

பாலொடு தேன் கலந்தற்றே என்ற திருக்குறள் தொடரும் பாலூறு தேன்வாய்ப் படிறீ என்ற பாவைத் தொடரும் இணைத்து நோக்குதற்குரியன. சிவனே சிவனே’ என்று இரண்டுமுறை அடுக்கி வந்தது அவனே அடைக்கலம் அளிக்க வல்லவன் என்பதைக் குறிப்பது. உணராய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/23&oldid=592224" இலிருந்து மீள்விக்கப்பட்டது