பக்கம்:பாவைப் பாட்டு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

â, ur. 23

உணராய்’ என்று இருமுறை அடுக்கி வருதல், வாயில் திறவாது படுக்கையில் உறங்கும் பாவையின் மடமையினை அறிவுறுத்துவது. ‘பரிசு’ என்பது அவள் நிலைக்கு இரக்கப் படுதலைக் குறிக்கும்.

இறைவனைப் பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் பார்க்கமுடியாது. அவனருளாகிய பதி ஞானத்தினால் மட்டுமே உணரமுடியும் என்ற சைவசித்தாந்தப் பேருண்மை யினை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

மாலறியா கான்முகனும்

காணா மலையினைகாம் போலறிவோம் என்றுள்ள

பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப்

படிமீ கடைதிறவாய்! ஞாலமே விண்ணே

பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட்

கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச்

சிவனே! சிவனே! என்(று) ஒலம் இடினும்

உணராய் உணராய்காண்1 ஏலக்'குழலி

பரிசேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/24&oldid=592231" இலிருந்து மீள்விக்கப்பட்டது