பக்கம்:பாவைப் பாட்டு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாவது திருப்பாடல்

முந்தைய திருப்பாட்டில் பதி ஞானத்தினால் மட்டுமே பரம்பொருளை உணரமுடியும் என்ற கருத்துச் சுட்டப் பெற்றது. இத்திருப்பாட்டு மானே! நீ தென் எல்லை எனத் தொடங்குகிறது. இறைவனை எண்ணி அவன் பெருமை களைப் பேசித் தம்மொத்த மகளிரொடு முன்னாள் வாய்ச் சொல் வீரத்தை எள்ளலாக இடித்துணர்த்தி நீராடற்கு அழைக்கும் அன்புச் செயலின் வெளிப்பாடாக இப்பாடல் அமைந்துள்ளது.

“மானே! நீ நேற்று என்ன சொன்னாய் தெரியுமா? நாளை வந்து உங்களை நானே எழுப்புவேன் என்றாயே! இப்போது வெட்கமற்று உறங்குகிறாய். நீ கட்டுரைத்த அம்மொழி சென்ற திசை கூறாய். உனக்குப் பொழுது இன்னும் புலரவில்லை போலும். வானும் நிலவும் பிற வெல்லாம் அறிதற்கு அரியானாகிய சிவபெருமான் நாம் தேடிச் செல்லாமல், அருட்பெருக்கம் காரணமாகத் தானே வந்து நமக்கு இரக்கங்காட்டுவான்; ஆட் கொண்டருள்வான். அத்தகைய அருட்செல்வனின் உயர்ந்த கழல்களைப் பாடி உன்னைப் பாவை நோன்பிற்கு அழைக்கவந்த எங்களிடம் உன் வாயைத் திறந்து பேசமாட்டாயா! உன்னுடைய ஊன் உருகமாட்டாயா? உனக்கும் ன்:யக்கும் யாவர்க்கும தலைவ னாகிய அப்பெருமானின் பெருமைகளைப் பாடுகின்ற எங்களுடன் இணைந்து நீ பாடிப் பரவுதற்கு எழுந்து வருக’ என்று கூறுகின்றனர் தோழியர்.

நேற்று எல்லோரையும் வந்து எழுப்புவதாக இவளே சொன்னாளாம். இன்று என்ன ஆயிற்று? வாழ்நாளில் பாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/25&oldid=592233" இலிருந்து மீள்விக்கப்பட்டது