பக்கம்:பாவைப் பாட்டு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 25

உறக்கத்தில் போவதுதானே மனித வாழ்க்கையின் இயல்பு. ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்றாற்போல ஒவ்வொரு நாளும் நிகழ்கின்ற இறப்புத்தானே இந்நெடுந் துயில். இதிலிருந்து விடுபடுவது என்ன அவ்வளவு எளிதா? நேற்று எழுப்புவதாகக் கூறியவள் இன்று ஒன்றும் புரியாமல் விழிக்கிறாள். அதனால்போலும் அவளது தோழியர் கூட்டம் மானே’ என்று அழைக்கிறது. மருண்டுவிடுவது மானின் இயல்பன்றோ! நானே எழுப்புவன் என்பது சகச மலத்தின் குறியீடன்றோ? அத்தகைய துணிவும் தெளிவும் உடையாளாக இருந்த ஒருத்தி, இன்று உறங்க, மற்றை உயிர் கள் இவளை எழுப்புகின்றன. வானும் நிலவுமாகிய இயற்கைக் கூறுகளெல்லாம் அப்பெருமானை அறிதற்கு அரியன. இவையனைத்தும் சடப் பொருள்கள். எஞ்சிய பூதங்களும் உணர்தற்கு அரியான் அப்பெருமான் . அத்தகைய பெருமை மிக்க இறைவன் தானே வந்து எம்மைத் தலை அளித்து அளித்த ஆட்கொண்டான் என்றார். தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை சங்கரா யார் கொலோ சதுரர்’ என்று மணிவாசகப் பெருமானே கூறுமாறுபோல இறைவனின் அளப்பரிய பெருமையும் ஆட்கொண்டருளும் பெருந்தகவும் அவர்க்கு ஆட்படுகின்ற உயிரின் சிறுமையும் மிக அழகாக இப்பாடலில் உணர்த்தப்பெறுகின்றன. இத்தகைய வான்கருணை கொண்டவனின் கழல் பாடுவ தன்றோ உயிர்கட்கு இன்றியமையாத செயலாகும். ஆயினும் இயல்பாகவே உயிர்களின் வேட்கை தம்மைப் புரக்கும் நாயகனைச் சார்தல் இல்லை. “வேனில் வேள் மலர்க் கணைக்கும் வெண் ணகைச் செவ்வாய்க்கரிய பாணலார் கண்ணியர்க்கும் பதைந்துருகும் பாழ் நெஞ்சே’, ‘வாழ் கின்றாய் வாழாத நெஞ்சமே என்றும் இறைவனின் அடி பணிதற்கு இயலாத மனத்தின் இயற்கையினைப் பிற பாடல் களிலும் மணிவாசகப் பெருமான் கூறியுள்ளார். அழல்சேரி மெழுகொப்ப எம்பெருமான் திறங்கேட்டு உருகுவதன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/26&oldid=592256" இலிருந்து மீள்விக்கப்பட்டது