பக்கம்:பாவைப் பாட்டு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாவைப் பாட்டு


பத்திக்கு உரைகல்? ‘தென்னா எனும் முனம் தீ சேர் மெழு கொப்பாய்’ என்று பாடுவதும் எண்னத்தகும். உள்ளங் கசியவும் ஊன் உருகவும் நிற்கும் அன்புடையார்க்கு அவ் விறைவன் தன் மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டித் திருவருள் புரிவான். அத்தகைய பெருமானைப் பாடற்கு எழுந்து வருக என்று அழைக்கின்றனர் தோழியர். பிறவா யாக்கைப் பெரியோன் ஆதலால் ஏனைத் தெய்வங்கள் போலப் பிள்ளைமைப் பருவம் பெற்றிலன், எக்காலத்தும் எப்போதும் எல்லாப் பொருளுடும் கலந்து நிற்கின்ற அப் பொருளின் பெருமை சுட்டப்பெற்றது. யாவர்க்கும் தலைவன் இறைவன் என்ற பேருண்மையினை மணிவாசகப் பெருமான் இப்பாடலில் தெளிவுறுத்தியுள்ளார். இறைவன் ஆன்மாக்களிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பு. அன்பு என்றாலும் பக்தி என்றாலும் ஒன்றுதான். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று திருவள்ளுவப் பெருந் தகையும் சுட்டுவார். அன்பு பெருக்கெடுக்கும் பொழுது, அதனை அணையிட்டுத் தடுக்க யாராலும் இயலாது. பாவைப் பெண்கள் பக்தியின் சின்னம். அன்புருக இறைபணியில் ஈடுபடுகின்றனர். பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளத் தைப் போல, அன்பர்களின் உள்ளத்தை நோக்கி ஓடி வருபவன் இறைவன் என்ற பக்தி நெறியின் பெருமையினை மணிவாசகப் பெருமான் இத்திருப்பாட்டில் தெளிவுறுத்தி யுள்ளார். எல்லோர்க்கும் தலைவன் இறைவன் என்ற கருத்தும் இத்திருப்பாடலில் உணர்த்தப் பெற்றது.


மானே! நீநென்னலை


காளைவங் துங்களை


கானே எழுப்புவன்


என்றலும் காணாமே


போன திசைபகராய்


இன்னம் புலர்ந்தின்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/27&oldid=592259" இலிருந்து மீள்விக்கப்பட்டது