பக்கம்:பாவைப் பாட்டு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது திருப்பாடல்

ஆறாம் திருப்பாட்டில் உருகி நிற்பவர்க்கு இறைவன் தாமே எளிவந்து அருள் புரியும் திறம் சுட்டப்பெற்றது. ‘அன்னே இவையும் சிலவோ என்ற இத்திருப்பாட்டு, இறை வனைக்குறித்த திருமொழிகளைக் கேட்டும் உறக்கம் கலைந்து எழாதிருக்கும் பெண்ணிற்கு இடித் துரையாகத் தோழியர் கூறுவதாக அமைந்தது. “அன்னே இவையும் சிலவோ என்று பேசத் தொடங்குகின்றனர் தோழியர். உறக்கத்தின் கொடும் பிடியிலிருந்து விலகி வந்து எம்பெருமானைப் பரவு தற்கு எழுந்து வர அழைக்கிறது தோழியர் குரல்.

இப்பாடலின் அரிய கருத்து காண்பதற்கு உரியது. கன்னிப்பெண்ணை எமக்குத் தாயே என்று பாவைப்பெண்கள் செல்லமாக விளித்தனர். தொடர்ந்து கேட்கின்றனர்! ‘வீடுவீடாகச் செல்வதும் உறங்கும் பெண்களை எழுப்புவதும் ஆகிய இவையெல்லாம் எங்கள் கடமைகளாகிவிட்டன போலும்! தேவர் பலராலும் நினைதற்கு அரியான். ஒப்பற்ற சிவபெருமான்; பல பெருமைகள் மிக்கவன். அவனுடைய பெருமையை எடுத்துரைக்கும் திருச்சின்னங்களின் ஒலிகேட்டுச் சிவன் என்று சொல்வி வாய் திறந்து வந்து எங்களைக் காணாயோ? உருகும் தென்னா என்று சொல்வதற்கு முன் முன்பெல்லாம் தீயில்விழுந்து உருகும் மெழுகைப் போன்று இளகுவாய். அத்தகைய எம்பெருமானை, எங்கள் அரசனை இன்னமுதென்று எல்லாரும் சொல்வது உன் காதில் கேட்கவில்லையா? இன்னும் உறங்குகின்றனையே; வலிய நெஞ்சம் கொண்ட பேதையரைப் போல ஒர் உணர்வும் இன்றிக் கிடக்கின்றாயே! இந்த உறக்கத்தின் தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/29&oldid=592265" இலிருந்து மீள்விக்கப்பட்டது