பக்கம்:பாவைப் பாட்டு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Я. т. 29

என்னவென்று கூறுவது’ என்று தோழி துயில் எழுப்பு கிறாள்.

மகளிர் பலர் ஒருங்கு கூடிக் குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளுக்குச் சென்று மார்கழித்திங்களின் நாட்காலை யில் நீராடி இறைவனைத் தொழுது வாழ்த் துவது பண்டைய வழக்கமாகும். இதனைத் தைந்நீராடல் என்றும் அம்பா ஆடல் என்றும் இலக்கியங்கள் மொழியும். அந்நோன்பு கொண்டாடும் மகளிர் வழியாக மாணிக்கவாசகப் பெருந்தகை சிவபரம்பொருளின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கின்றார். மகளிர் வழியாகவே பாரம்பரியப் பண்புகளும், இல்லறக் கடமைகளும் உலகில் பரவுதல் இயற்கை வகுத்தளித்த சட்டமாகும். எனவே, சிவத்தைப் போற்றும் சைவச் செந்நெறியின் வித்தை முளைக்க வைத்துப் போற்றும் பொறுப்பினை மணிவாசகர் பெண்களிடம் ஒப்படைக்கிறார். பின்து.ாங்கி முன்னெழும் பொறுப்பு ШD &RR)7 LDПГGRU தையலர்க்கு உண்டு. அதனைக் கன்னிப் பருவத்திலேயே இவர்கள் பெற வேண்டிாமா? இவ்வாறு தம்மை வருத்திக்கொண்டு, துயிலின்பம் ஒழித்து நீராடி நோற்பதால் யாது விளையும்? திருமாலுக்கும் நான் முகனுக்கும் தேவர்களுக்கும் எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக ஆக்குவான் என்கிறார் மணிவாசகர். அதனால் தான் இப்பாடலில் ‘அம்மே! சிவச்சின்னங்களின் நல்லொலி உன்காதில் விழுகின்றபோது ‘சிவா எனக்கூறி வாய் திறப்பாய்’ என்கிறார். வழுக்கி விழினும் அவன் திருப்பெய ரல்லாது வேறொன்றறியாத வாழ்க்கை உறுதியை இப்பாட்டு நமக்குக் கற்பிக்கின்றது. தென்னr என்று கூறுமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்று கூறுவதை நினைத்தல் வேண்டும். தென்பாண்டி நாடே சிவலோகமாம் என்று மொழிந்தவர் மணிவாசகர். தில்லையுட்கூத்தனைத் தென்பாண்டி நாட்டானை அல்லற்பிறவி அறுப்பானை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/30&oldid=592268" இலிருந்து மீள்விக்கப்பட்டது