பக்கம்:பாவைப் பாட்டு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாவைப் பாட்டு

என்று சிவபுராணத்திலும் அப்பெருமை பேசப்பெறும் வாதவூர் அடிகளின் வாழ்க்கை பற்றிய குறிப்புக் கெல்லாம் இங்கு இடமுண்டு.

“என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும்

சொன்னோங் கேள்!”

என்பதன் வயிலாக அன்னையும் அத்தனும் நமக்கு அவரல்லவோ என்ற மனநிலை புலப்படும். என்னவன், எம்மாசன், இன்னமுதம், என் வாழ்க்கை, ஆட்சி, உணவு ஆகிய மூன்றாகவும் காண்கிறது அப்பெண்ணின் உள்ளம். வாழ்க்கையில் கணவன் என்ற உறவே தலைமையானது. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என மொழிவர் இளங்கோவடிகள். அடுத்து அரசன்; மன்னுயிர்க்கெல்லாம் தானுயிராய் நின்று செங்கோல் செலுத்தும் தலைமை மிக்கவன். அடுத்து உணவாகும் இன்னமுதம்: மூப்பும் பிணியுமின்றி வாழ வைக்கும் வானவர் நாட்டு அமிழ்தம். இவ்வாறு சிவபெருமானைக் காணும் சிறப்பினை இப்பாடல் காட்டுவதை நாம் உணரவேண்டும். வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடத்தியால் என்பது சிவபரம்பொருள் பற்றிய சிந்தனையைச் சீலமாகக் கொள்ளாத சிறுமை வாழ்வைக் குறிக்கும் தொடராகும். எம்பெருமானை வணங்காத்தலை இகழ்விற்கு எடுக்கும் தலை என்றாற்போல அவனை எண்ணாது, சிவம் என மொழியாது உறக்கமே தொழிலாகக் கிடப்பது வன்னெஞ்சப் பேதையர் செயல் என்று இடித் துரைப்பர். நெஞ்சக் கனகல்லையும் நெகிழ்ந்துருகச் செய்யும் ஈசன் திருப்பெயர்கள் கேட்கும் அசைவின்றிக் கிடந்தால் இவளை என் சொல்வது? ஆகவே, வன்னெஞ்சப்பேதை’ என்றார், “என்னே துயிலின் பரிசு’ என்பது பிறவி நோயழிக்கும் பெருஞ்சிறப்புக்குரிய திருப்பெயரை எண்ண விடாமற் செய்யும் இந்தத் தூக்கம் எவ்வளவு கேடு செய்கிறது என்று உணர்த்துவதற்கெழுந்த தொடராகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/31&oldid=592269" இலிருந்து மீள்விக்கப்பட்டது