பக்கம்:பாவைப் பாட்டு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§). Lum. 31

இது தமோ குணத்தின் தன்மை. இறைவனை உணரப் பசித்திரு, தனித்திரு, விழித்திரு, என்றே சான்றோர் கூறினர் என்பதையும் இங்குக் கருத வேண்டும். இதுவே சத்துவ குணத்தின் தன்மை. நெடுநாளைக்கு முன்புகட அல்ல, நேற்று நீ சொன்ன மொழிகளையே மறக்கடித்துவிட்டதே இந்தத் துயில் என்று பாட்டிலும் கூறியதிலிருந்து யாரொருவர்க்கு ஆக்கம் வேண்டுமொ அவர்கள் தூக்கத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற உலகியலையும் ஒருசேர இப்பாடல் உணர்த்துகிறது.

அன்னே! இவையுஞ்

சிலவோ? பல அமரர் உன்னற் கரியான்

ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச்

சிவன் என்றே வாய்திறப்பாய்! தென்னாஎன் னாமுன்னம்

தீசேர் மெழுகொப்பாய் என்னானை என் அரையன்

இன்னமுதென் றெல்லோமும் சொன்னோங்கேள் வெவ்வேறாய்

இன்னங் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின்

பரிசேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/32&oldid=592271" இலிருந்து மீள்விக்கப்பட்டது