பக்கம்:பாவைப் பாட்டு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது திருப்பாடல்

சென்ற திருப்பாட்டில் ஆக்கம்பெற விழைவோர் தூக்கத்தினின்று விடுபெற வேண்டும் என்ற உண்மை உணர்த்தப் பெற்ற திறம் கண்டோம். கோழி சிலம்பச் சிலம்பும்’ எனத்தொடங்கும் எட்டாம் திருப்பாடவின் எழில் நலமும் பொருட்சிறப்பும் நோக்குவோம்.

ஒரு புலர் காலைப்பொழுது நமக்குச் சிவபரம்பொருளை அறிவுறுத்துவதாக அமைவதனை இப்பாட்டு நன்கு கூறுகிறது. இருளின் மடியில் துயின்றிருந்த எல்லாம் கண்விழித்துவிட்டன. கதிரவன் தன் இளம் கைகளால் தொழுமுன்னே அவை யெல்லாம் கடமை உணரத் தொடங்கிவிட்டன. ‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாய்ப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாய்’ எத்தனை எத்தனை பிறவிகள்! இயலும் இவற்றி லெலாம் உயர்ந்தது மானிடப் பிறவியன்றோ அதனால் தான், ‘மணித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்றனர். இறைவனை உணர்ந்து வழிபாடு செய்து தம் வினைய கற்றிக் கொள்ளும் திறம் மனிதப்பிறவிக்கே உண்டு, மனிதப் பிறவி ஒன்றே அஞ்செழுத்தை இடைவிடாது சிந்திக்க இயலும், அதுபற்றியே ‘புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா நின்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரம்’ வேண்டினர் பெரியோர்.

இவ்வெட்டாம் பாட்டின் பொருட்சிறப்பை இங்கு நோக்குவோம். ‘கோழி கூவுகிறது; பறவையினங்கள் ஆர்ப் பரிக்கின்றன. ஏழு துளைகளையுடைய இசைக்கருவிகள் இன்னிசை பரப்புகின்றன. வெண்சங்கின் ஒலி எங்கெங்கும் கேட்கிறது. ஒப்பிலாத இறைவனின் பெருங்கருணையை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/33&oldid=592272" இலிருந்து மீள்விக்கப்பட்டது