பக்கம்:பாவைப் பாட்டு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 33

அவனைக் குறித்த உயர்ந்த செய்திகளை நாங்கள் பாடி னோமே அது உன் செவிகளில் விழவில்லையா? இஃது என்ன உறக்கமோ? வாயிற்கதவைத் திறப்பாயாக! ஆணைச் சக்கரத்தை உடைய எம்பெருமானின் அன்புடைமை இவ்வாறு தேடுவார்க்கே புலனாகும். ஊழி முதல்வனாக இருக்கின்ற ஒருவனைப்பாடாதிருப்பது உனக்குச் சரியாகுமா? ஏழை பங்காளனைப் பாடற்கு எழுந்து வருக’ என்று பாவை மகளிர் துயிலெழுப்புவதாக அமைந்தது இப்பாட்டு.

கோழிகள் துயிலெழுந்துவிட்டன. அவற்றின் குரல் கேட்டுக் குருகுகள் எல்லாமும் துயிலெழுந்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. இவற்றின் பின் குழல் முதலாய இசைக் கருவிகளும் சங்கும் ஒலி யெழ மனிதர் கடமையாற்றத் தொடங்கினர். வைகறைப்பொழுதின் வனப்புறு காட்சி இது, இயற்கையே இறைவழிபாட்டுக்குத் துாண்டுவது போல் தன் இனிய காலைச் சூழலை அமைத்துத் தந்துள்ளது. இசை வல்லார் தம் இசைக்கருவிகளில் தொன்றுதொட்டு இசைக்கும் பெருமானின் புகழைப் பேசுகின்றனர். இவற்றுக் கெல்லாம் மேலாகத் தோழியர் தனக்கு ஒப்பொன்றும் இல்லாத பரஞ்சோதியின் புகழ்பாடுகின்றனர். காலை எழுத்தவுடன் பிறவிக்கே அருமருந்தான ஒரு பொருளைப் பற்றியும், அதன் கருணைப்பெருக்கைப் பற்றியும், நுணுக்க மான பல செய்திகளைத் தெள்வத் தெளிவாக நாங்கள் பாடுகிறோமே கேட்கவில்லையா என்கின்றனர். தம்மைத் தொழுவோர்க்குத் தம் அளவில் பெருங்கருணை அலை யெறிந்து நீராட்ட, அப்பரம்பொருள் அழைப்பதனையே கோழியும் குருகும் ஏழிலும், சங்கும் காட்டுகின்றன. கூவின பூங்குயில், கூவின கோழி. குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம் என்று திருப்பள்ளி யெழுச்சியிலும் மணிவாசகர் காலைப்போதின் வண்ணம் காட்டுவார். ‘வாழி யீதென்ன உறக்கமோ என்கிறாள் தோழி. நோய் கொண்டவர் உறங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/34&oldid=592273" இலிருந்து மீள்விக்கப்பட்டது