பக்கம்:பாவைப் பாட்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது திருப்பாடல்

எட்டாம் திருப்பாட்டு ஏழை பங்காளனின் எளிவந்த தன்மையினைப் பேசியது. இவ்வொன்பதாம் திருப்பாடல், முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழப்பொருளே’ எனத் தொடங்குகிறது. பழம்பொருள்கள் யாவற்றிலும் பழமை மிக்கதாகவும், புதுப்பொருள்கள் யாவற்றிலும் புதுமை மிக்கதாகவும் விளங்குகின்ற பரம்பொருளைப் பணியும் நெறியினை இப்பாடல் அழகுற இயம்புகின்றது. இதுவரை துயிலெழுப்புதலும், நீராடற் கேகலும், வாயிற் கடை திறக்க வேண்டலுமாக இருந்த பாவையர் திருக் கூட்டம், பெருமானைப் பரவி ஏத்தும் பணியில் இப்போது ஈடுபடுகிறது. உறக்கத்திலிருந்து எல்லாரும் கண் விழித்தா யிற்று. இறைவனை வணங்கும் கடமை உணர்ந்தாயிற்று. அவனிடம் என்னகேட்பது? அதனை உணர்த்தும் வகையில் அமைந்தது இப்பாட்டு.

முன்னைப் பழம்பொருள்கள் யாவற்றிலும் மூத்தது இறை. காலம் தன் குறிகளையும் குணங்களையும் பதிக்க முடியாத ஒன்று இறை. தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு குழ்கலை வாணர்களும் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் என்று கூறுவதுபோல் அவ்வளவு பழம்பொருள் இறை. திங்களொடும் செழும்பருதி தன் னோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் என்று பாவேந்தர் கூறுவதுபோல் உலகப்பொருள் யாவற்றினும் கழிய முத்தது. அத்தகைய முப்பு செயலற்ற தாக அன்றோ அமையும்? அப்படியன்று, நிலவும் கதிரும் தொழிலாற்றித் தேய்ந்து போயினவா? உடுக்கள் ஒளிசிந்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/37&oldid=592277" இலிருந்து மீள்விக்கப்பட்டது