பக்கம்:பாவைப் பாட்டு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 37

கரியாகப் போயினவா? இவற்றையெலாம் கலகநிலையறியாத காட்சியாகி என்று வள்ளலார் சொல்லுமாறு படைத் தளிக்கும் ஒன்றுக்கு அம்மூப்பின் முத்திரை ஏதுமில்லை, கால நியதிகளைக் கடந்தது அம்முழுமுதல்: காலனையே தம் காலால் கடிந்தது அக்கண்ணுதல். அதுமட்டுமோ! இன்றைக்குத் தோன்றிய பொருள்களின் இளமையும் அதன் கண்ணே இருக்கும். ‘பழமையினால் சாகாத இளையவள் காண்’ என்ற புரட்சிக்கவிஞர், மாணிக்கவாசகரை உணர்ந்’ திருக்கின்றார். இன்றைக்கும் இனி என்றைக்கும் வரப் போகிற புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக இருக்கும் பெருமை வாய்ந்தவனே என்று போற்றுகின்றனர். உன்னைத் தலைவனாக அடைந்த அடியவர்கள் நாங்கள். உன்னுடைய அடியார்களின் தாள் பணிவோம் என்றுரைக் கின்றனர். அடியார்க்கு நல்லார் என்பது தமிழக மறிந்த பெயராயிற்றே! தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்றாற்போல இறைவனின் அடியார்க்குத் தொண்டு செய்தல் இறைவனுக்கே ஆற்றும் பணிக்கு ஒப்பாகும். “நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் படமாடும் கோயில் பகவற்கு அங்கு ஆகும்’ என்பதன்றோ திருமூலர் தவமொழி, அதுமட்டுமோ? அவர்களே எங்கள் கணவருமாவர் என்று கூறுகின்றனர். “நள்ளேன் நினதடியா ரோடல்லால் நரகம் புகினும்” என்று பாடியவரன்றோ மணிவாசகப்பெருந்தகையார்! எங்கள் வாழ்க்கை சிவபரம் பொருளை நினைந்து போற்றுதற்கு வாயிலாகச் சிவனடித் தொண்டர்களையே மணப்போம் என்று கூறும் உறுதியை என்னென்பது? எம் கணவராகும் சிவனடித் தொண்டர் சொன்ன பரிசே நாம் தொழும்பு செய்வோம்; அடிமையாக நாம் அவர் இட்ட பணிகளையும் ஆற்றுவோம், இவ்வரத் தினை எங்களுக்கு நல்குதல் வேண்டும் என வேண்டுகின்ற னர், இப்பாவைப்பெண்கள். ‘காதல் ஒருவனைக் கைப்

илra-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/38&oldid=592290" இலிருந்து மீள்விக்கப்பட்டது