பக்கம்:பாவைப் பாட்டு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாவைப் பாட்டு

பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து’ மாதர் அறங்கள் வளர்ப்பதுதானே வைய வாழ்வின் உயரிய நோக்கம். அதற்காக இாப்பதாக அமைகிறது இந்த மார்கழி நோன்பு. சமயப்பற்று நெறியில் சிறிதும் குறையாத அழுத்தமும் அதனை வாழ்நாளில் கடைக்கொண்டொழுகும் பெற்றிமையும் கொண்டவராக மகளிர் விளங்குதலை இப் பாட்டு இயம்புகின்றது.

காலதேச வர்த்தமானங்களைக் கடந்து மூப்பிளமை இல்லாத ஒரு பொருளாய் நிற்கும் இறைவனை வணங்கப் போந்த நேரிழையார், பொன், பொருள், போகம் ஆகியவற்றை வேண்டிலர். “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல அருளும் அன்பும் அறனும்’ என்று பரிபாடல் கூறுவதுபோல நின்னைத் தொழுது வாழும் வாழ்வை அளிக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர். இறையுணர்வில் தம்மைக் கரைத்துக்கொள்ளும் ஞானியர்க்கு விடும் வேண்டுவதில்லை, “ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவர் விடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்பர் சேக்கிழார் பெருமான். ஆகவே அத்தகைய இறையன்பு வேண்டலையே தம் குறிக்கோளாகக் கேட்டனர் பாவைப் பெண்கள். முழுமையும் செம்மையும் ஒருங்கே இயல்பில் அமைந்த பரம்பொருளின் தொண்டர்கள் சார்ந்ததன் வண்ணமாகச் செம்மை பெற்றுத் திகழ்வர். அத்தகைய தலைவரைப் பாவைப்பெண்கள் அடைதற்பொருட்டு போற்றலும் வேண்டலும் இத்திருப்பாட்டின் பொருளாக அமைந்தன.

முன்னைப் பழம்பொருட்கு

முன்னைப் பழம்பொருளே!

பின்னைப் புதுமைக்கும்

பேர்த்தும்அப் பெற்றியனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/39&oldid=592302" இலிருந்து மீள்விக்கப்பட்டது