பக்கம்:பாவைப் பாட்டு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது திருப்பாடல்

சென்ற திருப்பாட்டில் இறைவன் பழமைக்குப் பழமை யாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் திகழும் பெற்றியும் அவனை வழிபடும் பாவைப்பெண்கள் அவன் அடியார் களையே கணவராகப் பெறுதற்கு இறைவனை வெண்டும் பாங்கும் சிறப்புறக் கூறப்பெற்றன. பத்தாம் திருப்பாட்டு பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்’ என்று தொடங்குகிறது. இப்பாடல் இறைவனின் சர்வ வியாபகத் தன்மையை அணிநயம் தோன்ற எடுத்துக் காட்டுகிறது. அடியைத் தேடிச்சென்ற திருமாலும் அதனைக் காண முடியாது தவித்தார். காரணம் புராணங்களில் சொல்லப் பெறும் அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசா தலம். மகாதலம். பாதாளம் என்ற ஏழு வகையான உலகு அடுக்கு களைக் கடந்து சென்றாலும் அதற்கும் அடியில் பரம் பொருளின் திருவடி வியாபித்துள்ளது. எனவே மனிதனின் பெளதிக முயற்சிகளால் அத்திருவடியை அறிந்துகொள்ள முடியாது. இறைவனின் திருமுடியைக் காண்பதற்கு முயன்று சென்ற நான்முகன் பாதியளவுகூடப் பயணம் செய்ய முடியாமல் திரும்பிவிட்டான். அத்திருமுடி சர்வ அண்டங் களையும் கடந்து மேலே வியாபித்திருப்பது. மறைகள் ஓலமிட்டுத் தேடும் முடிவற்ற பொருளாக அது விளங்கு கிறது. மணிவாசகப்பெருமானே குயிற் பத்தில்,

“கீதமினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்

பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்

சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து கின்ற

தொன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/41&oldid=592306" இலிருந்து மீள்விக்கப்பட்டது