பக்கம்:பாவைப் பாட்டு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 41

ஆதிகுண மொன்றுமில்லா அந்தமிலான் வரக்கூவாய்”

என்று சிவ பரம்பொருளின் ஆதியையும் அந்தத்தையும் எளிதில் அறியவொண்ணா ஏற்றத்தையும் குறித்துள்ளார். திருவடி என்பது திருவருளைக் குறிப்பது. திருமுடி என்பது ஞானத்தைக் குறிப்பது. உலகியல் அறிவாகிய பாச ஞானத் தையும் உயிர் வருத்தங்கள் பற்றிய அறிவாகிய பசு ஞானத் தையும் கருவியாகக்கொண்டு பரம்பொருளை அறிய முற்படுவது பேதமை என்பதைத் திருவடி தேடிய புராணச் செய்தி நமக்கு உணர்த்துகிறது. சிவஞானமாகிய பதிஞானத் தினால் மட்டுமே திருவடியை உணர்தல் முடியும் என்பது சைவ சித்தாந்தத் துணிவு. இறைவன் ஞான வடிவினன். அவ்வடிவமே அனைத்திற்கும் மணிமுடியாகத் திகழ்தலின் அதனைப் பெருமானின் திருவடியாக உபசரித்துக் கூறினார். இக்கருத்தினையே மணிவாசகப் பெருமான் இப்பாடலின் தொடக்க அடிகளில் சுட்டியுள்ளார்.

வேத விற்பன்னர்கள். விண்ணகத்தேவர்கள். மண்ணக மாந்தர்கள் ஆகியோர் அப்பெருமானைப் போற்றிப் பரவு கின்றனர். அவருடைய தொண்டர்களின் எண்ணிக்கை வரம் பற்றது. தோழம் என்ற பழந்தமிழ்ச் சொல் எண்ணற்ற வர்கள் என்ற பொருளில் பேரெண்ணின் எல்லையாக வழங்கும். மணிவாசகப்பெரு மான், ‘ஓத உலவா ஒரு தோழந் தொண்டருளன்’ என்று சுட்டுகின்றார். தொண்டா கள் உள்ளத்தையே கேபயிலாகக் கொண்டவன் இறைவன்

என்பது கருத்து.

குற்றமற்ற கோயிற் பணிப்பெண்களை இப்பொழுது பாவைப்பெண்கள் எழுப்புகின்றார்கள். அரன் பணியினை அன்புடன் ஆற்றும் பேறு பெற்ற அணுக்கத்தொண்டர்கள் ‘கோயிற் பினாப்பிள்ளைகள்’ என்று போற்றப்பெற்றனர். அவர்களை விளித்துப் பாவைப்பெண்கள், ‘இறைவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/42&oldid=592307" இலிருந்து மீள்விக்கப்பட்டது