பக்கம்:பாவைப் பாட்டு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பாவைப் பாட்டு

என்று தனித்ததோர் ஊர் ஏது?. எல்லா உயிர்களுமே அவன் வியாபகமாயிற்றேi இறைவனுக்கென்று தனித்தஒரு பெயர் ஏது? எல்லாப் பேர்களிலும் அவன் வியாபித்திருக்கிறான். இறைவன் அனைவர்க்கும் பொதுவாயிருத்தலின் உறவு, அயன்மை என்ற பேதம் இல்லை ‘ என்ற கருத்தில் பேசு கின்றனர். இத்தகைய இறைமைக்குணங்கள் வாய்ந்த பரம் பொருளை மற்றோர் இடத்தில் மணிவாசகப் பெருமான்,

”ஒருகாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருகாமம் பாடிகாம் தெள்ளேணம் கொட்டாமோ’

என்று மகளிர் பேச்சாகவே அமைத்துப் பாடியிருத்தல் இங்கு நோக்கத்தக்கது. இறைவனின் சொரூப இலக்கணம் இப் பகுதியில் பேசப்பெறுதல் எண்ணி இன்புறத்தக்கது.

இத்தகைய பரம்பொருளை எவ்வண்ணம் பாராட்டிப் பேசுவது? வரம்பற்ற பரம்பொருளை வரம்பிற்குட்பட்ட புகழ்ச்சொற்களில் அடக்கி நிறுத்துவது நம் அன்பினைப் புலப்படுத்துமேயன்றி முடிவுபோக அப்பரம்பொருளைப்

புனைந்து காட்டுதல் புலவர்க்கும் ஒண்ணாது. இக்கருத் தினையே,

‘ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்’ என்ற கடைசியடி நமக்குக் காட்டுகிறது.

இத்திருப்பாட்டில் இறைவனின் சொருப இலக்கணமும், தொண்டர் பெருமையும், பாடிப்பரவும் பத்திமை நெறியின் பன்மான் சிறப்பும் மணிவாசகப்பெருமானால் தெளிவுறுத்தப் பெறுதல் எண்ணி இன்புறத்தக்கது.

பாதாளம் ஏழினுங்கீழ்

சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும்

எல்லாப் பொருள்முடிவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/43&oldid=592309" இலிருந்து மீள்விக்கப்பட்டது