பக்கம்:பாவைப் பாட்டு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 45

எனவேதான் மூன்றாவதாக ஆரழல் போற் செய்யா’ என்று அவர்கள் சிவபெருமானை விளித்தனர். நெருப்பின் சிறப்புத் தன்மை அழுக்கினைச் சுட்டெரிக்கும் பாங்கின தாகும். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், தியினுள் தூசாகும் என்று தம் கவிதையில் குறிப்பிட் டுள்ளார். சிவனின் சிவந்த நிறத்தை நினைந்த கன்னியர்கள் அச் செந்நிறத் திருமேனியில் விளங்கும் திருவெண்ணிற்றைக் காண்கிறார்கள். சிவபெருமான் திருமேனி, வெண்ணிறாடி’ நிற்கின்றது. எனவே, வெண்ணிறாடி என அழைத்தனர். அதனாலேயே, திருஞானசம்பந்தப் பெருமான்

“செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர் ,

சேரும் மடியார் மேல் பைய நின்றவினை பாற்றுவார்’

என்று தம் தேவாரத் திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் செந்நிறமும், வெண்ணிறமும் கொண்டவர் மட்டும் அல்லர்; முக்தி அருளும் முழு முதற் பொருளும் ஆவார். எனவேதான், கன்னியர்கள், வெண்ணிறாடி என வழங்குவதை அடுத்து, “செல்வா’ என்றார்கள். சிவ பெருமானின் அருளுக்கு வழி உமையம்மையை நினைவு கொள்ளுதல் வேண்டும். எனவே, சிற்றிடையினையும் மையுண்ட கண்களையும் கொண்ட கன்னியர்கள் உமை. யொரு பாகனை அடைந்த உமாதேவியை, நினைக்கின்றனர். உமையம்மையை சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை’ என விளிக்கின்றார்கள். ‘ஐயா என அடுத்துக் கன்னியர்கள் ஆண்டவனை விளிப்பது சிவபெருமானின் தன்மையினை எடுத்துக் காட்டுவதாகும்.

இத்திருப்பாடலில் சிவபதம் அளிக்கும் சிவபெருமானை முதற்கண், ‘ஆரமுல்போல் செய்யா’ என்றும் இரண்டாவ தாக, ‘வெண்ணிறாடி என்றும், மூன்றாவதாக செல்வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/46&oldid=592313" இலிருந்து மீள்விக்கப்பட்டது