பக்கம்:பாவைப் பாட்டு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாவைப் பாட்டு

என்றும், நான்காவதாக “சிறுமருங்குல் மையார் தடங்கன் மடந்தை மணவாளா என்றும் , ஐந்தாவதாக ‘ஐயா என்றும் விளிக்கின்றார்கள்.

இந்தப் பொய்கையில் அக்கன்னியர்கள் நாட்காலையில் எழுந்து நீராடும் திறத்தினைக் காண்போம். வண்டுகள் அமைந்திருக்கும் பரந்த நீர்த்தடாகத்தின் நீர்நிலையில் உட்புகுந்து நீராடித் திளைக்கிறார்கள். தம் கைகளால் நீரினை முகேர்’ என்னும் ஒசை எழும்பக் குடைந்து குடைந்து நீராடுகிறார்கள். அவர்கள் தங்களைச் சிவன் தன் வழியடி யோம்’ என்கிறார்கள். தலைமுறை தலைமுறையாகச் சிவபரம்பொருள் தொண்டு செய்யும் வழியினர் என்பதனைக் கன்னியர்கள் வழியடியோம் வாழ்ந்தோங்காண்’ என்கிறார் கள், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எம்பெருமானே எங்களை அடிமை கொண்டு ஆட்படுத்துவான் என்ற கருத்தில் இத்தொடரினை மொழிகின்றார்கள். தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமானும், ‘மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலம்’ என்று நம்பி ஆரூரரைப் பெற்றெடுத்த நற்றவம் மேம்படும் தந்தையார் குலத்தினைக் குறிப்பிடுவார்.

‘முகேர்’ எனும் ஒசை உண்டாக நீரின் ஆழத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து சிவன் கழல் பாடுவதே சிறப்பு என்பதனை வைகறைப் பொழுதினில் கன்னியர் கூறி நிற்கிறார்கள். மேலும் உம் வழியடியோம், வாழ்ந்தோம்காண்’ என்னும் தொடரில் ஒர் அரிய குறிப்பு உள்ளது. இறைவன் தங்களை வாழ்விப்பான், எல்லாப் பொருளையும் வாழ்விப்பான் என்பது கன்னியர்களுடைய உட்கிடக்கை.

உயிர்களை உய்யும் வண்ணம் ஆட்கொண்டு அருளும் திறம் சிவபெருமானுக்கு இயல்பாயமைந்தது. உயிர்கள் எந்தக் குறைவிற்கும் ஆட்படாமல் காப்பாற்றவேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/47&oldid=592314" இலிருந்து மீள்விக்கப்பட்டது