பக்கம்:பாவைப் பாட்டு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாவது திருப்பாடல்

கன்னியர்களை வழிவழியாக அடிமை கொண்ட

வள்ளலாய் விளங்குகின்றார் சிவபெருமான் என்பது முன்னைய பாட்டின் முடிந்த முடிபாகும். இளைப்பு ஏது மின்றிக் காக்கவேண்டும் என்று கருணைப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானை வேண்டிக்கொண்ட கன்னிப் பெண்கள், இத்திருப்பாட்டில் பிறவித் துயர்கெட அருள் பாலிக்கும் அண்ணல் அச் சிவபெருமான் என்பதனைக் கூறு வாராய்,

‘ஆர்த்த பிறவித்

துயர்கெடகாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! கற் றில்லைச்சிற்

றம்பலத்தே தீயாடும்

கூத்தன்... என்கின்றனர், நல்வினை, தீவினைகள் இருவகையாகக் குறிப் பிடப்படும். நல்வினை ஆற்றினால் பொன்னுலகு சேர்வதும், தீவினையில் திளைத்து நிற்பார், கொடிய அருநரகத்தைச் சேர்தலும் இயல்பு என்பது தமிழ் முதற்காப்பியம் கண்ட குணவாயில் கோட்டத்து அரசு துறந்து, அதே நேரத்தில் தமிழைத் துறவாமல் இருந்து தமிழ் முதற்காப்பியம் தந்த இளங்கோவடிகளின் கருத்தாகும். எழுபிறப்பு உண்டு எனத் திருவள்ளுவர் நம்புவது தமிழ்க் கொள்கையாகும்.எழுமை எழுபிறப்பு என்றெல்லாம், திருவள்ளுவர் குறிப்பிடுவார்,

மணிவாசகப் பெருந்தகையார் சிவபுராணத்தில்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/49&oldid=592317" இலிருந்து மீள்விக்கப்பட்டது