பக்கம்:பாவைப் பாட்டு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 49

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்’ என்று சுட்டுவார்.

அவரவர் செய்யும் வினைப்பயன்களைத் துய்க்க வந்த

பிறவியாகிய துன்பம் என்பது ‘ஆர்த்த பிறவித்துயர் என்ற தொடரின் பொருளாகும்.

‘பிறவிப் பெருங்கடல் நீத்துவர்’ என்று திருவள்ளுவர் அன்றாட வாழ்வின் துன்பங்களில் தோய்ந்திருப்பவர்களைக் குறிப்பிடுகிறார்.

‘பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெருபே ரின்பம்” என்று சீத்தலைச் சாத்தனார் தம் மணிமேகலைக் காப் பியத்தில் குறிப்பிடுவார். இறைவனடி சேர்பவர் மீண்டும் பிறப்பு எடுத்து, இவ் உலகில் துன்பப்பட வேண்டியதில்லை. இறைவனடிசேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தார் என்ற கருத்து குறள்வழி வெளிப்படுகின்றது. ஆயினும், சிவகதி சித்திக்கப்பெற வேண்டும் என்று பாடுபடும் சிவனடியார்கள் சிவன் கழலைச் சென்று சேருவதற்கு இந்தப் பிறவியே ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என எண்ணுவர்.

“வாய்ந்தது ஈது கந்தமக்கு ஒரு பிறவி’ என்று கருதி ‘அவனருளாலே அவன்தாள்” வணங்கவேண்டு மென்பது ஆன்றோர் அருளிய நெறியாகும். ஆண்டவன் திரு வடிகளைச் சென்று சேர்வதற்குப் புறத்துய்மையும், அகத் துய்மையும் ஒருவருக்கு ஒருங்கே அமையப்பெற வேண்டும். உடல் தூய்மையை நீரால் அமைத்துக்கொள்ளலாம். அகத் தூய்மையை அடையும் ஆறு எது? தூய தெளிந்த நீரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/50&oldid=592319" இலிருந்து மீள்விக்கப்பட்டது